அதிரடியான கெட்டப்பில் ரசிகர்களை மிரளவைத்த வனிதா – வைரலாகும் ஷூட்டிங் புகைப்படம்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா தற்போது தனது புதிய படத்தில் போலீஸ் வேடத்தில் நடிக்க இருக்கும் நிலையில் அந்த புகைப்படத்தை இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

வனிதா விஜயக்குமார்

ஆரம்பத்தில் இருந்தே பல பிரச்சனைகளுடன் சமூக வலைத்தளங்களில் சர்ச்சைக்குரிய ராணியாக வலம் வருபவர் தான் வனிதா. அதுவும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்த அந்த சிறிது நாட்கள் அவர் ஆடிய ஆட்டத்திற்கு எல்லையே இல்லை என்று தான் சொல்ல வேண்டும்.

அந்த நிகழ்ச்சியில் தான் அவருக்கு வத்திக்குச்சி வனிதா என்ற பெயரே வந்தது. அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர் டைட்டிலையும் கைப்பற்றினார்.

ஓரளவிற்கு மக்கள் மத்தியில் நல்ல பெயரை எடுத்து வந்த வனிதா 3 வது திருமணம் மூலம் சோசியல் மீடியா முழுக்க பிரபலமானார். எந்த வலைப்பக்கத்தை திறந்தாலும் வனிதா பற்றிய செய்தி தான் உலா வந்தது.

அப்படி இருக்க தற்போது அவர் அனைத்து விஷயங்களில் இருந்தும் ஓரளவிற்கு மீண்டு வந்துள்ளார். மேலும் பல படங்களிலும் நடிக்க கமிட்டாகியுள்ளார். சிம்ரன், பிரஷாந்த் நடிக்கும் அந்தகன் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். மேலும் பவர் ஸ்டாருடன் இணைந்து பிக்கப் ட்ராப் என்ற படத்தில் நடிக்கவுள்ளார்.

அந்த திரைப்படத்தின் புகைப்படம் தான் இணையத்தில் வைரலாகி சர்ச்சையை கிளப்பியது. இந்நிலையில் போலீஸ் வேடத்தில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். வனிதாவின் இந்த புதிய அவதாரம் அனைவரையும் வியக்கவைத்துள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here