ஜீ தமிழுக்கு தாவிய வனிதா விஜயகுமார் – சேனல கூட இப்படி தான் மாத்துவீங்களா??

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமான வனிதா தற்போது ட்விட்டர் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை பார்த்த பலரும் சேனலை கூட இஷ்டத்திற்கு மாத்துவீங்களா?? என கலாய்த்து வருகின்றனர்.

வனிதா

நடிகர் விஜய் குமாரின் மகளாகிய வனிதா தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்கி வருபவர். தனது மகன் ஸ்ரீஹரி பிரச்சனையில் ஆரம்பித்து பீட்டர் பால் வரை பல பிரச்சனைகளில் சிக்கி வந்தார். தனது அப்பா சொத்துக்கள் எதுவும் தராமல் தன்னை ஏமாற்றுவதாகவும்., தனது அம்மாவான மஞ்சுளாவையும் இத்தனை நாட்கள் ஏமாற்றியதாகவும் சமூக வலைத்தளங்களில் கூறியிருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதற்கிடையில் தான் அவருக்கு பிக் பாஸ் வாய்ப்பு கிடைத்தது. தனது அராஜகமான பேசினாலும், நடவடிக்கையாலும் அனைவரையும் காயப்படுத்தினார். இதனால் மக்களுக்கும் அவரை பிடிக்காமல் போனது. அதன் பிறகு குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் டைட்டிலை தட்டி சென்றார். அதன் பிறகு யூடியூப் நிகழ்ச்சி ஒன்றை நடத்தினார்.

என சார் பயம் வந்துடுச்சா?? கொரோனா தடுப்பூசியை போட்டுக்கொண்ட பிரபல நடிகர்!!

அதில் தனக்கு உதவியாக இருந்த பீட்டர் பாலை திருமணம் செய்துகொண்டார். அதில் ஆரம்பித்தது அவரது பிரச்சனையே. தற்போது வரை பல தடங்கல்களை சந்தித்து வருகிறார். ஆனாலும் இரும்பு மனது கொண்ட வனிதா தனது கேரியரில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். எதையுமே காதில் வாங்கிக்கொள்ளலாம் தற்போது அதிக பிரபலமடைந்து வருகிறார். பிரபல நடிகர் பிரஷாந்த் படத்தில் நடிக்க வனிதா கமிட்டாகியுள்ளார்.

இதனால் பலரும் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்தும் வந்தனர். இந்நிலையில் இவர் ஜீ தமிழில் ஜீன்ஸ் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொள்ள உள்ளார். அதனை தனது ட்விட்டர் பக்கத்திலேயே தெரிவித்துள்ளார். விஜய் டிவியில் இருந்து ஜீ தமிழுக்கு மாறிட்டீங்களா?? என்று பலரும் அவரை கலாய்த்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here