வனிதா உங்க ஹார்ட் ஒர்க் வீண் போகல – பிரபல நடிகரையே ஓரங்கட்டிய சாதனை!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் அதிக பிரபலமடைந்த வனிதா விஜய் குமாருக்கு தற்போது படவாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. மேலும் இவரை பற்றிய செய்திகள் தான் பரவி வருகிறது.

வனிதா

விஜய்குமாரின் மகளாகிய வனிதா தொடர்ந்து பல சர்ச்சைகளில் சிக்க ஆரம்பித்தார். அவரது கல்யாணத்தில் ஆரம்பித்து தற்போது பீட்டர் பால் பல பிரச்சனைகள். ஆரம்பத்திலேயே தனது மகன் ஸ்ரீ ஹரிகாக பல வழக்குகளை சந்தித்திருந்தார். ஆனால் அவர் மக்கள் மத்தியில் பிரபலமானது பிக் பாஸ் நிகழ்ச்சியில் தான். அவரது கராரான பேச்சும் அடாவடியும் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியது. மக்கள் பலரும் இவரை வெறுக்க தான் செய்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

ஆனாலும் எதையுமே காதில் வாங்காமல் தொடர்ந்து தனது வேலைகளை செய்துகொண்டு தான் இருந்தார். விஜய் டிவியில் குக் வித் கோமாளியின் கலந்துகொண்டு டைட்டிலையும் கைப்பற்றினார். நாளுக்கு நாள் ரசிகர்கள் அதிகமானார்கள். அதனை எல்லாம் உடைக்கும் வகையில் பீட்டர் பால் என்பவரை திருமணம் செய்துகொண்டார் வனிதா. இது பல பிரச்னைகளை ஏற்படுத்தியது.

அதன் பின் பீட்டர் பாலும் வனிதாவும் பிரியும் நிலையும் ஏற்பட்டது. அதன் பிறகு வனிதா தனது வேலையை பார்க்க ஆரம்பித்து விட்டார். தற்போது அவர் நாளுக்கு நாள் அதிக பிரபலமடைந்துகொண்டே இருக்கிறார் என்று தான் சொல்ல வேண்டும். ஏனெனில் அவர் பற்றிய சிறிய தகவல் கசிந்தாலும் அது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதாவது தற்போது வனிதா பிரஷாந்த் நடிக்கும் ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதில் சிம்ரனும் இணைத்து நடிக்கிறார்.

கமலுக்கே நோ சொன்ன மாவட்ட ஆட்சியர் – அப்போ பிரச்சார வேலை என்னாகுறது??

இப்படி பிரபலமான நடிகர், நடிகை நடித்தும் இந்த படத்தில் வனிதா நடிப்பதே தற்போது ஹைலைட் ஆகி வருகிறது. இணையதளம் முழுவதும் வனிதா பிரஷாந்த் படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார் என்ற செய்தியே பரவி வருகிறது. இந்த அளவிற்கு வனிதாவின் புகழ் பரவி வருகிறது. பல சேனல்களில் வனிதாவின் கன்டென்ட் தான் வைரலாகி வருகிறது. இதனை ட்விட்டர் பக்கத்தில் பின் செய்து காட்டியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here