தன் ஆருயிர் தம்பியுடன் புதிய படத்தில் கமிட்டான வனிதா – வைரலாகும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் மக்கள் மத்தியில் பிரபலமான வனிதா விஜய் குமார் தற்போது தனது ரீல் தம்பியுடன் இணைந்து படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார்.

பிக் பாஸ் வனிதா

சர்ச்சை ராணி என்று அனைவராலும் புகழப்படும் வனிதா தற்போது தொடர்ந்து படவாய்ப்புகளை பெற்று வருகிறார். ஏற்கனவே இவருக்கு 3 திருமணங்கள் நடந்துள்ள நிலையில் பிக்கப் என்ற படத்தில் போஸ்டர் வெளியாகி அவருக்கு 4வது திருமணம் என்று புரளியை கிளப்பி விட ஆரம்பித்து விட்டனர்.

இதனால் கொந்தளித்த வனிதா ஆண்கள் இந்த மாதிரியான திருமணம் செய்துகொண்டால் அது தவறு கிடையாது, ஆனால் ஒரு பெண் இவ்வாறு செய்து விட்டால் அவர்களை கண்டபடி பேசுவது, இதனால் தான் நாட்டில் தற்கொலை அதிகரித்து வருகிறது என்று பதிலடி கொடுத்து அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

என்ன நடந்தாலும் சரி, யார் என்ன பேசினாலும் சரி தனது வேலைகளை மட்டுமே பார்த்து கொண்டு இருக்கிறார் வனிதா. எப்படியும் பெரிய ஆளாக வர வேண்டும் என்று போராடி வருகிறார்.

அந்த வகையில் தான் அவருக்கு வாய்ப்புகள் குவிந்து வருகிறது. இந்நிலையில் அவர் குக் வித் கோமாளியில் தன்னுடன் கலந்துகொண்ட பாலாவுடன் இணைந்து ஒரு படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளார். அதனை தனது இணைய பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here