வனிதாவுடன் ஜோடி சேரும் சமுத்திரக்கனி – வைரலாகும் ‘அந்தகன்’ பட அப்டேட்!!

0

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானவர் வனிதா. தற்போது அந்தகன் படத்தில் அவருக்கு இருக்கும் ரோல் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது. இதனால் பலரும் ஷாக்காகியுள்ளனர்.

வனிதாவின் ‘அந்தகன்’

தமிழில் வெளியான ‘சந்திரலேகா’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் வனிதா. அதன் பிறகு வாய்ப்புகள் கிடைக்காமல் திருமண வாழ்க்கையில் கால் பதித்தார். இதனால் பல பிரச்சனைகளை அவர் சந்திக்க வேண்டி இருந்தது. 3 வது திருமணம் வரை பல சர்ச்சைகளில் சிக்கினார். எப்படி இருந்தாலும் வனிதா மக்கள் மத்தியில் பிரபலமாகிக்கொண்டு தான் உள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

எப்போதும் இளமையாகவே இருக்க வேண்டுமா?? இந்த பேஸ்பேக் மட்டும் ட்ரை பண்ணி பாருங்க!!

இந்நிலையில் அவருக்கு படவாய்ப்புகளும் குவிந்த வண்ணம் உள்ளது. தற்போது பிரபல நடிகரான பிரஷாந்த் நடிக்கும் ‘அந்தகன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்திற்கான ஷூட்டிங் மும்முரமாக போயிக்கொண்டுள்ளது. ஹிந்தியில் சக்கைபோடு போட்ட ‘அந்தாதூண்’ என்ற படத்தின் ரீமேக் தான் ‘அந்தகன்’ திரைப்படம். வனிதா நடிப்பதாலேயே இந்த படத்திற்கு அதிக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இப்படி இருக்க தற்போது அந்த படத்தில் நடிக்க சமுத்திரக்கனியும் இணைந்துள்ளார். மேலும் வனிதாவுக்கு ஜோடி அவர் தானாம். இதனை கேட்ட பலரும் ஷாக்காகியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here