வத்திக்குச்சி வனிதாவா இது !!! ஆளே மாறிட்டாங்க – ஆச்சர்யத்தில் ரசிகர்கள்

0

சர்ச்சைகள் பல சிக்கிசிக்கி மக்கள் மத்தியில் பிரபலமாகி தனக்கென ஒரு பாதையை அமைத்தவர் வனிதா. தற்போது அவர் உடல் எடை குறைத்த புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

வனிதா:

பிரபல நடிகரான விஜயகுமார் அவர்களின் மகள் மற்றும் நடிகர் அருண் விஜய் அவர்களின் சகோதரியுமானவர் தான் வனிதா. இவர்களது குடும்ப சண்டையின் காரணமாக தனியாக இருந்து வந்தார். இவரது காதல் திருமணம் சரியாக அமையாததால் இவரது வாழ்க்கை கேள்வி குறியானது.அதன் பின் இரண்டாம் திருமணம் சில காரணங்களால் சரியாக அமையவில்லை.

அதன்பின் பீட்டர் பால் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார் வனிதா. அது பெரும் சர்ச்சைகளுக்குள்ளானது. இது போன்ற சர்ச்சைகளையெல்லாம் பொருட்படுத்தாமல் தனது வாழ்க்கையின் மீது கவனம் செலுத்தி வந்தார்.

பிக்பாஸ் நிகழ்ச்சின்மூலம் பிரபலமாகி குக் வித் கோமாளி நிகழ்ச்சின்மூலம் ராசிகளை கவர்ந்தார். அதனை தொடர்ந்து ஒரு சீரியலில் சிறப்பு தோற்றத்தில் கூட நடித்திருந்தார். கொஞ்சம் குண்டாக இருந்த வனிதா தற்போது உடல்எடை குறைக்கும் வேலையில் ஈடுபட்டிருக்கிறார். எடை குறைத்து அந்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here