குக் வித் கோமாளிக்கு அடிப்போடும் பிரபலம் …! – செஃப்பாக மாறிய நடிகை வாணி போஜன் !!!

0

சின்னத்திரை பிரபலங்கள் பலரே இன்று வெள்ளித்திரையில் ஜொலிக்கின்றனர். அந்த வரிசையில் வந்தவர் தான் நடிகை வாணி போஜன். இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான  ‘ஆஹா’ என்ற சீரியல் மூலம் தனது சின்னத்திரை பயணத்தை ஆரம்பித்தவர். அதன் பின்னர் அவர் திரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து கொண்டு உள்ளார். இந்நிலையில் தற்போது அவர் இன்ஸ்டா பக்கத்தில் ஒரு உணவகத்தில் செஃப் உடன் சேர்ந்து பல வித உணவுகளை தயாரிப்பது போன்ற வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அந்த வீடியோ வைரல் ஆகிவருகிறது.

நடிகை வாணி போஜன் அவர்கள் விஜய் டிவியின் ஆஹா சீரியல் மூலம் அறிமுகம் ஆனவர். அதை தொடர்ந்து ஜெயா டிவியின் மாயா , சன் டிவியின் தெய்வ மகள் உட்பட சில  சீரியல்களில் நடித்து உள்ளார். இதையடுத்து இவருக்கு வெள்ளித்திரையில் நுழைய வாய்ப்பு கிடைக்கவே அங்கையும் நுழைந்து விட்டார். சின்னத்திரையில் ஜொலித்த காலகட்டத்தில் சின்னத்திரை நயன்தாரா என்றே இவர் அழைக்கப்பட்டு வந்தார். அந்த அளவிற்கு இவர்  நடிப்பு மற்றும் அழகும் வாய்ந்தவர்.

வெள்ளித்திரையில் ஓரிரு படங்களில் சிறு சிறு வேடங்களில் நடித்த நடிகை வாணி போஜன், ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் தமிழில் நாயகியாக உருமாறினார். இதை தொடர்ந்து அவர் சில படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில் இவரின் நடிப்பில் வெளியான படம்  மலேஷியா to அம்னிஷியா ஆகும். இந்த படத்தில் வைபவுக்கு ஜோடியாக நடித்து இருப்பார்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் அவரின் சமீபத்திய புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் ரசிகர்களிடம் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் தற்போது அவர் வெளியிட்டு உள்ள ஒரு வீடியோவில் , உயர்தர உணவகம் ஒன்றில் செஃப்  ஒருவருடன் சேர்ந்து பேக்கரி வகை உணவுகளை தயாரிக்கும் தோணியில் உள்ளார். அந்த செஃப் உடையிலும் அவரின் அழகிற்கு குறைவில்லை. இதன் மூலம் அவர் குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு தயாராகிறாரா என்ற சந்தேகம் ரசிகர்கள் மனதில் எழுந்து உள்ளது.

 

View this post on Instagram

 

A post shared by Vani Bhojan (@vanibhojan_)

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here