பிங்க் கலர் சுடிதாரில் வெண்பனி மலராக மின்னும் வாணி போஜன்…!அழகு அள்ளும் புகைப்படங்கள் இதோ!!! 

0

சின்னத்திரை நயன்தாராவாக வலம் வருபவர் நடிகை வாணி போஜன் அவர்கள். தற்போது தனது இன்ஸ்டா பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். அதில் பிங்க் கலர் சுடிதாரில் செம அழகாக சிரித்து ரசிகர்களை தன்வசப்படுத்தி உள்ளார். அந்த போட்டோவுக்கு ஏராளமான லைக்ஸ்கள் குவிந்து வருகிறது.

ஒரு இரவு என்ற தமிழ் படத்தின் மூலம் திரைக்குள் நுழைந்தார் நடிகை வாணி போஜன். ஆனால் இந்த திரைப்படம் வெளியிடப்படவில்லை. எனவே அவருக்கு திரை பயணத்தின் ஆரம்பமாக அமைந்தது சின்னத்திரை சீரியல்கள் தான். அந்த வகையில் விஜய் டிவியில் ஆஹா என்ற சீரியலில் சுருதி கதாபாத்திரத்தில் அறிமுகமானார். அதன் பிறகு பல சீரியல்களில் நடித்து உள்ளார். இருப்பினும் சன் டிவியின் தெய்வ மகள் சீரியல் மூலம் மிக பிரபலமானார். மேலும் இவர் சின்னத்திரை நயன்தாரா என்று அழைக்கப்படுகின்ற அளவிற்கு சீரியல் மூலம் புகழ் பெற்றார்.

தற்போது எல்லாம் சின்னத்திரை நாயகிகள் தான் வெள்ளித்திரையில் கலக்கி வருகின்றனர். அந்த வகையில் வாணி போஜன் அவர்கள் வெள்ளித்திரை பக்கம் தாவி படங்களில் நடித்து வருகிறார். நடிகர்  ஜெய் அவர்களின் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே என்ற படத்தின் மூலம் மீண்டும் வெள்ளித்திரை  கதாநாயகியாக மாறியுள்ளார். மேலும் அவரின் கைவசம் ஓரிரு படங்களும் உள்ளன.

இந்நிலையில் அவர் தனது சமூக வலைத்தளங்கள் மூலமாக அவ்வப்போது தன்னுடைய அழகு கொஞ்சும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கிறங்க வைத்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவரின் இன்ஸ்டா பக்கத்தில் வெளியான புகைப்படத்தில் பிங்க் கலர் சுடிதாரில் வெண்பனி மலராக சிரிப்பால் ரசிகர்களை கவர்ந்து ஈர்த்து உள்ளார். அழகு அள்ளும் இந்த புகைப்படம் வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here