வலிமை படத்தின் மாஸ் அப்டேட் – அடுத்த  வாரத்தில் வெளியாகுமா டீஸர்?? எதிர்பார்ப்பில் தல ரசிகர்கள்!!

0

ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து வரும் வலிமை திரைப்படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்த செய்தி தல ரசிகர்கள் மத்தியில் தற்போது பெரும் குஷியை ஏற்படுத்தியுள்ளது.

நேர்கொண்ட பார்வை படத்தை இயக்கிய இயக்குனர் வினோத் இயக்கத்தில், தல அஜித் நடிப்பில் உருவாகியுள்ள படம் வலிமை. இப்படத்தில் ஹூமா குரோஷி, தெலுங்கு நடிகர் கார்த்திகேயா உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்திற்காக தல ரசிகர்கள் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கும் மேலாக காத்து கிடக்கின்றனர். தற்போது இப்படத்தின் அப்டேட் ஒவ்வொன்றாக வந்து கொண்டிருக்கிறது.

தல அஜித்தின் 61வது படம் அப்டேட்...

ஏற்கனவே வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர், மோஷன் போஸ்டர், சிங்ளில் ட்ராக் வெளியாகி ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்றது. சில நாட்களுக்கு முன்பு தான் இப்படத்தின் படப்பிடிப்பு ரஷ்யாவில் முடிந்தது. தற்போது இப்படத்தின் டீசர் எப்பொழுது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் நிலவி வருகிறது.

இந்நிலையில் வலிமை படத்தின் டீசர் அடுத்த வாரம் வெளியாகும் என்று தகவல்கள் வெளியாகிய வண்ணம் உள்ளன. பேஸ்புக், ட்விட்டர் போன்ற சமூக வலைத்தளங்களிலும் தல ரசிகர்கள் இந்த செய்தியை ட்ரெண்டாக்கி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here