2 வருட காத்திருப்புக்கு பதிலளித்த போனி கபூர் – வெளியான வலிமை ரிலீஸ் தேதி!!

0

தல அஜித்தின் நடிப்பில் உருவாகியுள்ள வலிமை படம் பொங்கலுக்கு வெளிவர இருப்பதாக அப்படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் தன் ட்விட்டர் பக்கத்தின் மூலம் உறுதிபடுத்தியுள்ளார்.

ஹெச்.வினோத் இயக்கத்தில் அஜித், ஹீமா குரேஷி நடிப்பில் யுவன் ஷங்கர் ராஜா இசையில் வெளிவர இருக்கும் படம் வலிமை. இப்படம் எப்பொழுது வெளியாகும் என தல ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர். தற்போது அவர்களுக்கெல்லாம் இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் வலிமை படம் பொங்கல் அன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.

ஏற்கனவே பல முன்னணி நடிகர்களின் படங்கள் பொங்கலுக்கு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில் வலிமை வெளியிட்டு தேதி ரசிகர்களை குஷிப்படுத்தியுள்ளது. தல ரசிகர்கள் இந்த தகவலை தற்போது ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here