‘தல’ அஜித்தின் வலிமை பட அப்டேட் – எதிர்பார்த்து ஏமாந்து போன ரசிகர்கள்!!

0

“தல” அஜித் நடிப்பில் தற்போது தயாராகி வரும் திரைப்படம் தான், வலிமை. இந்த திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் வரும் மே 1 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது அது குறித்த லேட்டஸ்ட் அறிவிப்பு ஒன்றினை வெளியிட்டுள்ளனர் படக்குழுவினர்.

“வலிமை” திரைப்படம்

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான “தல” அஜித் நடிப்பில் தயாராகி வரும் திரைப்படம் தான், “வலிமை”. பாலிவுட் நடிகர்கள் உட்பட பலரும் இந்த திரைப்படத்தில் நடித்து வருகின்றனர். “நேர்கொண்ட பார்வை” திரைப்படத்தை இயக்கிய வினோத் இந்த படத்தினையும் இயக்குகிறார். போனி கபூர் தயாரிக்க இந்த திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசை அமைத்து வருகிறார். இந்த திரைப்படம் கடந்த ஆண்டே துவங்கி விட்டது.

கண்ணம்மாவை ‘பிளாஸ்டிக் சிண்டக்ஸ் ட்ரம்’ என்று கலாய்த்த நெட்டிசன்கள் – பதிலடி கொடுத்த முக்கிய பிரபலம்!!

ஆனால், இன்று வரை இந்த திரைப்படம் குறித்து எந்த ஒரு தகவலும் இன்று வரை எந்த ஒரு அதிகாரப்பூர்வ தகவலும் வெளியாகவில்லை. இதன் காரணமாக “தல” ரசிகர்கள் எங்கு சென்றாலும் “வலிமை” அப்டேட் என்று கேட்டு வந்தனர். தொடர்ந்து ரசிகர்கள் அன்பு தொல்லை செய்து வந்ததால் வரும் மே 1 ஆம் தேதி, அதாவது “தல” அஜித்தின் 50 வது பிறந்தநாளின் போது பிரஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று போனி கபூர் தனது வலைதளத்தில் தெரிவித்து இருந்தார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இதனால் அனைத்து தரப்பு ரசிகர்களும் மிகவும் மகிழ்ச்சியுடன் இருந்து வந்தனர். இப்படியாக இருக்க, போனி கபூர் ஒரு செய்தி அறிவிப்பினை வெளியிட்டுள்ளார். அதில் கொரோனாவின் இரண்டாவது அலை தாக்கத்தின் காரணமாக “வலிமை” திரைப்படத்தின் பிரஸ்ட் லுக் மே 1 ஆ தேதி வெளியிடப்படாது என்று தெரிவித்துள்ளார். இதனால் ரசிகர்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here