தல அஜித்தின் வலிமை படம் இப்படி தான் இருக்கும் – போனி கபூர் வெளியிட்ட தகவல்!!

0
valimai

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் வலிமை படத்தின் அப்டேட் குறித்து அந்த படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் பேட்டி கொடுத்துள்ளார். அந்த தகவல் தற்போது ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

அஜித்தின் வலிமை

நடிகர் அஜித் நடிக்கும் புதிய திரைப்படம் தான் வலிமை. இந்த படத்தை இயக்குனர் எச்.வினோத் இயக்க போனி கபூர் தயாரிக்கிறார். இரண்டு வருடங்களுக்கு பிறகு நடிகர் அஜித் நடித்துள்ள திரைப்படம் என்பதால் இந்த படத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர். இப்படி இருக்க வலிமை திரைப்படம் வெளியாவதில் பல குழப்பங்கள் நீடித்து வந்த நிலையில், இப்படத்தின் அப்டேட் குறித்து ரசிகர்கள் பொது இடங்களில் கேட்டு வந்தனர்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

முன்னதாக வலிமை திரைப்படம் நடிகர் அஜித்தின் பிறந்தநாளான மே மாதம் 1ஆம் தேதி ரிலீஸ் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த தேதியில் படம் வெளியாவதற்கு சிக்கல்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது. இப்படி இருக்க வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனி கபூர் சமீபத்தில் பேட்டி ஒன்று கொடுத்துள்ளார். அதில் பேசிய போனி கபூர் வலிமை திரைப்படம் அஜித் ரசிகர்களை திருப்தியளிக்கும் விதத்தில் இருக்கும்.

தமிழகம், காரைக்கால் மீனவர்கள் சிறப்பிபிடிப்பு – நீதிமன்றத்தில் முறையீடு!!

மக்கள் அனைவரும் பார்த்து ரசிக்க கூடிய சிறந்த திரைப்படமாக வலிமை திரைப்படம் இருக்கும். அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த வலிமை திரைப்படம் எல்லா வயது ரசிகர்களும் ரசிக்கக்கூடிய அளவுக்கு ஒரு குடும்ப திரைப்படமாக வலிமை அமையும் என கூறியுள்ளார். தொடர்ந்து வலிமை படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நடிகர் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகும் எனவும் தெரிவித்துள்ளார். இந்த தகவலால் நடிகர் அஜித்தின் ரசிகர்கள் உற்சாகமாக இருந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here