போடு தகிட தகிட.. ரிலீஸ் ஆவதற்கு முன்பே வலிமை படைத்த சாதனை… தெறிக்கவிடும் தல ரசிகர்கள்!!!

0

தமிழ் சினிமாவில் முன்னனி நட்சத்திரமான தல அஜித்தின் நடிப்பில் இயக்குனர் வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் வலிமை. இப்படத்தின் அப்டேட் கேட்டு தல ரசிகர்கள் கிட்டத்தட்ட 1 வருடமாக காத்து உள்ளனர். தற்போது வலிமை படம் வெளியாவதற்கு முன்பே ஒரு சாதனையை படைத்துள்ளது.

இயக்குனர் வினோத் மற்றும் தல அஜித் கூட்டணியில் கடந்த 2019-ம் ஆண்டு ‘நேர்கொண்ட பார்வை’ படம் வெளியானது. இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு மீண்டும் இந்த கூட்டணி வலிமை படத்தில் இணைவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டது. இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். மேலும் இப்படத்தின் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா.

இதனால் குஷியான ரசிகர்கள் இந்த படத்தின் அப்டேட் கேட்டு வந்தனர். ஆனால் கொரோனா காரணமாக படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை. ஆனால் தற்போது கூடிய விரைவில் அப்டேட் வெளியாவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளன. இந்நிலையில் ஆன்லைனில் டிக்கெட் முன்பதிவு செய்யும் தளமான புக் மை ஷோவில் இப்படம் புதிய சாதனையை படைத்துள்ளது.

புக் மை ஷோ தளத்தில் வலிமை படத்துக்காக தற்போது 7 லட்சத்துக்கும் அதிகமான பேர் ஆர்வம் தெரிவித்துள்ளனர். இன்னும் பர்ஸ்ட் லுக் கூட வெளியாகாத நிலையில் இப்படத்தை இத்தனை பேர் ஆர்வம் தெரிவித்துருப்பது அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது. இதுவரை எந்த படமும் வெளியாவதற்கு முன்பே இப்படி ஒரு சாதனையை நிகழ்த்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here