“அடடடா ஆரம்பமே…!” ‘தல’ அஜித்தின் வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் வெளியானது!!!

0

ரசிகர்களின் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பிய நடிகர் அஜித்தின் படமான வலிமை படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக் மற்றும் மோஷன் போஸ்டர் நேற்று வெளியாகி ரசிகர்களை குஷிப்படுத்தி உள்ளது. இதையடுத்து அவரின் ரசிகர்கள் இந்த படத்தின் புதிய அப்டேட்டை கொண்டாடுவதோடு இணையத்தில் அதை வைரலாகி வருகின்றனர்.

திரை உலகில் வசூல் நாயகனாக முடிசூடா மன்னாக ரசிகர்களின் மத்தியில் ஒரு தலைவனாக ‘தல’ என்ற பெயருடன் வலம் வருபவர் நடிகர் அஜித் அவர்கள். இவர்  பல சோதனைகளை சாதனைகளாக மாற்றி முன்னேறியவர். இந்நிலையில் இவரின் படத்திற்காக வெறித்தனமாக ஆவலுடன் பல்லாயிரக்கணக்கான ரசிகர்கள் காத்துக் கிடக்கின்றன. அந்த வகையில் அவரின் வலிமை படத்தின் அப்டேட் எதிர்பார்த்து பல நாட்களாக ரசிகர்கள் இருந்தனர். மேலும் அஜித்தின் ரசிகர்கள் எங்கு பார்த்தாலும் வலிமை அப்டேட் கேட்டு வந்தனர் .

இந்த வலிமை படமானது ஹெச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு  கடந்த 2019ஆம் ஆண்டு தொடங்கியது. கொரோனா காரணமாக இதன் படப்பிடிப்புகளில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்கான புதிய அப்டேட் நேற்று வெளியாகி உள்ளது. அதாவது  வலிமை படத்தின் மோஷன் போஸ்டர் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் நேற்று மாலை அளவில் வெளியானது. இதையடுத்து அவரின் ரசிகர்கள் மிகுந்த கொண்டாட்டத்தில் உள்ளனர். மேலும் இந்த புகைப்படங்களை இணையத்தில் ட்ரெண்ட் ஆகி வருகின்றனர்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here