வலிமை படம் கண்டிப்பாக சொன்ன தேதியில் வெளியாகும் – ரசிகர்களுக்கு நம்பிக்கை கொடுத்த போனி கபூர்!!

0

கொரோனா காரணத்தால் வலிமை படம் வெளியாகும் தேதி தள்ளி போய் விடுமா என்ற கவலையில் இருந்த ரசிகர்களுக்கு தயாரிப்பாளர் போனி கபூர் ஒரு ப்ரோமோ மூலம் கண்டிப்பாக சொன்ன தேதியில் படம் ரிலீஸ் செய்ய படும் என்று கூறியுள்ளார்.

வலிமை:

நடிகர் அஜித் குமார் நடிப்பில் வெகு நாளாக ரிலீஸ்க்கு காத்திருக்கும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை எச்.வினோத் இயக்கி உள்ளார். மேலும் இந்த படத்தை போனி கபூர் தயாரித்து உள்ளார். இந்த படத்தில் அஜித்துடன் இணைந்து காலா படத்தில் நடித்த நடிகை ஹிமா குரேஷி மற்றும் தெலுங்கு நடிகர் கார்த்திகேயா ஆகியோர் நடித்து உள்ளனர். மேலும் இந்த படம் ஜனவரி 13 ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என்று படக்குழு அறிவித்து இருந்தது.

இந்த நிலையில் தற்போது கொரோனாவின் மூன்றாம் அலை தலைவிரிக்க துவங்கி உள்ளது. இதனால் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுடன் செயல்பட வேண்டும் என்று கூறியுள்ளது தமிழக அரசு. இதை தொடர்ந்து ரசிகர்கள் படம் ரிலீஸ் ஆகுமா இல்லையா என்ற கவலையில் உள்ளனர்.

இந்த நிலையில் ரசிகர்களின் கவலையை போக்கும் வண்ணம் வலிமை படத்தின் தயாரிப்பாளரான போனி கபூர் ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு கண்டிப்பாக படம் ஜனவரி 13 ஆம் தேதி வெளியாகும் என்று கூறியுள்ளார். அதேபோல் கடந்த ஆண்டு நடிகர் விஜய்யின் மாஸ்டர் படமும் இது போல் ஒரு சூழலில் தான் வெளியானது. ஆனால் வெற்றியும் அடைத்தது. இந்த முறையை போனி கபூரும் பின்பற்றியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here