
கோலிவுட் திரையில் ரசிகர்களால் வைகை புயல் என அழைக்கப்பட்டு வருகிறார் நடிகர் வடிவேலு. கடந்த சில மாதங்களுக்கு முன் இவர் நடிப்பில் வெளியான ”மாமன்னன்” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இவரின் நடிப்புக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்திருந்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதை தொடர்ந்து இவர் சந்திரமுகி 2 விலும் நடித்துள்ளார். இப்படி தனது கெரியரில் பிஸியாக இருந்து வரும் இவர் நேற்று பேட்டியாளர்களின் கேள்விக்கு பதிலளித்துள்ளார். அதில் இவரிடம் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து உங்கள் கருத்து என்ன என்று கேட்கப்பட்டுள்ளது. அதற்கு அவர் எல்லாரும் அரசியலுக்கு வரலாம், போகலாம். திறந்த கதவு தானே அரசியல். இவரும் வரட்டும், எவரும் வரட்டும். ஏன் நீங்கள் கூட வாங்களேன் என பேட்டி எடுப்பவரை பார்த்து கூறியுள்ளார்.
இந்தியாவை குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேட்டி., பொதுமக்கள் கடும் அதிருப்தி!!!