இனி புலிகேசி மாதிரி படங்களில் நடிக்கவே மாட்டேன் – வடிவேலு ஓபன் டாக்!!

0
இனி புலிகேசி மாதிரி படங்களில் நடிக்கவே மாட்டேன் - வடிவேலு ஓபன் டாக்!!
இனி புலிகேசி மாதிரி படங்களில் நடிக்கவே மாட்டேன் - வடிவேலு ஓபன் டாக்!!

இனி இம்சை அரசன் 23 ஆம் புலிகேசி போன்ற வரலாற்று படங்களில் நடிக்க மாட்டேன் என வடிவேலு செய்தியாளர் சந்திப்பில் கூறியுள்ளார் . மேலும் நகைச்சுவையில் தனக்குப் போட்டி தான் மட்டுமே என்றும் தெரிவித்துள்ளார்.

தமிழ் காமெடி உலகில் கொடி கட்டி பறந்தவர் வைகைப்புயல் வடிவேலு. இவரை வெறுப்பவர்கள் தமிழ் நாட்டில் யாரும் இருக்கமாட்டார்கள். அந்த அளவுக்கு தன் நகைச்சுவையால் ரசிகர்களை கட்டி போட்டு வைத்து இருப்பவர் இவர். ஆனால் இவருக்கும் இயக்குனர் சங்கருக்கும் இடையே ஏற்பட்ட பிரச்சனையால் தயாரிப்பாளர் சங்கம் இவருக்கு ரெட் கார்டு தந்தது.

இனி புலிகேசி மாதிரி படங்களில் நடிக்கவே மாட்டேன் - வடிவேலு ஓபன் டாக்!!
இனி புலிகேசி மாதிரி படங்களில் நடிக்கவே மாட்டேன் – வடிவேலு ஓபன் டாக்!!

இதனால் படங்களில் நடிக்க முடியாமல் சில காலம் அவதிப்பட்டு வந்தார். பின்னர் நடந்த பேச்சுவார்த்தையில் இந்த பிரச்சனை ஒரு வழியாக முடிவுக்கு வந்து வடிவேலுவிற்கு அளிக்கப்பட்ட ரெட் கார்டு திரும்ப பெறப்பட்டது. எனவே மீண்டும் கோலிவுட்டில் ரீஎன்ட்ரி கொடுத்துள்ளார் வடிவேலு.

இனி புலிகேசி மாதிரி படங்களில் நடிக்கவே மாட்டேன் - வடிவேலு ஓபன் டாக்!!
இனி புலிகேசி மாதிரி படங்களில் நடிக்கவே மாட்டேன் – வடிவேலு ஓபன் டாக்!!

இந்நிலையில் வடிவேலு தனது 61 வது பிறந்த நாளை நேற்று (12 செப்டம்பர் 2021) கொண்டாடியுள்ளார். அப்போது அவர் இனி வரலாற்றுப் படங்களில் நடிக்கவே மாட்டேன் என்றும், இது கலைத்தாயின் மீது சத்தியம் என்று தெரிவித்து தனக்குப் போட்டி தான் மட்டுமே என்றும் கூறியுள்ளார். மேலும் நகைச்சுவையில் மட்டுமே கவனம் செலுத்தப்போவதாகவும் ஓரிரு படங்களுக்குப் பிறகு கதாநாயகனாகவும் நடிக்கப்போவதில்லை என்று கூறியுள்ளார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here