வடிவேலுவின் உண்மையான முகம் இது கிடையாது…, படத்தில வாய்ப்பே தரமாட்டாரு.., உண்மையை உடைக்கும் பயில்வான்!!

0

இருபது ஆண்டுகளுக்கு மேலாக சினிமா துறையில் காமெடி நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கும் வடிவேலு, மக்களின் மனதில் நீங்காது இடம்பிடித்து வருகிறார். இப்படிப்பட்ட காமெடியனின் உண்மையான முகம் இதுவா என பலரையும் ஆச்சர்யப்படுத்தியுள்ளது.

வடிவேலுவின் உண்மையான முகம்

நடிகர் வடிவேலுவின் காமெடிக்கு சிரிக்காத ஆளே இருக்க முடியாது. அந்த அளவிற்கு தமிழ் மக்களின் உள்ளங்கள் கவர்ந்தவர். இது வரை இவர் 200 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட காமெடியன்கள் வந்த நிலையிலும் வடிவேலுவுக்கு இப்பொழுதும் வரை மவுசு குறையாமல் உள்ளது. பல பிரச்சனைகளில் சிக்கி இதனால் வாய்ப்பு இல்லாமல் இப்பொழுது தான் மீண்டும் திரையில் கால் எடுத்து வைத்துள்ளார். திரையில் இவர் எவ்வளவு தான் காமெடியாக இருந்தாலும் நிஜத்தில் இவரது முகம் வேறு தான் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அதாவது இவருக்கு முன்னால் வேறொரு நடிகரை புகழ்ந்து பேசினால் இவருக்கு பிடிக்காது. பணம் புகழ் ஆகியவை போதும் போதும் என்றளவில் கிடைத்ததால் சற்று திமிரு மற்றும் ஆணவத்துடன் நடந்து கொள்கிறார். போண்டாமணி, அல்வா வாசு, முத்துகாளை, தாடி பாலாஜி, சிங்கமுத்து ஆகியோருடன் இவர் இணைந்து நடித்திருந்தாலும் அவர்களை பற்றி வேறு யாரவது புகழ்ந்து பேசினால் அடுத்த படங்களில் வாய்ப்பை தரமாட்டாராம்.

'இனி சங்கர் பக்கமே தலை வச்சு படுக்க மாட்டேன்' - வெளிப்படையாகவே கூறிய வடிவேலு!!

அதுமட்டுமில்லாமல் பயில்வான் ரங்கநாதன் வடிவேலுவுடன் படப்பிடிப்பில் இருந்தபோது கௌண்டமணி செந்திலை பற்றி புகழ்ந்து பேசியதால் அடுத்த படங்களில் சுத்தமாகவே வாய்ப்பை தரவில்லையாம். ஒருமுறை பிரச்சாரத்தின் போது விஜயகாந்த் குறித்து அவதூறாக பேசினார். இயக்குனர் சங்கருடன் ஏற்பட்ட பிரச்சனையால் ரெட் கார்டு வழங்கப்பட்டு பத்து ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சில படங்களில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அனைவரையும் சிரிக்க வைக்கும் இவருக்கு இப்படி ஒரு முகமா என்பது அதிர்ச்சியாக உள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here