பிரபல வடிவேலு பட குணச்சித்திர நடிகை திடீர் மறைவு – வறுமையில் வாடிய நிலையில் உயிரிழந்த சோகம்!!

0
வடிவேலு பட குணச்சித்திர நடிகை திடீர் மறைவு
வடிவேலு பட குணச்சித்திர நடிகை திடீர் மறைவு

தமிழ் சினிமாவில் சிவாஜி கணேசன் முதல், தற்போதைய ஹீரோக்கள் வரை பல முன்னணி நடிகர்களுடன் குணசித்திர வேடத்தில் நடித்த ரங்கம்மாள் பாட்டி காலமான செய்தி, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ரங்கம்மாள் பாட்டி:

மக்கள் திலகம் எம்ஜிஆர் நடிப்பில் வெளியான விவசாயி என்ற படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு வந்தவர் ரங்கம்மாள் பாட்டி. ஆரம்பத்தில் சிறு சிறு மேடை நாடகங்களில் நடித்து வந்த அவருக்கு, தொடர்ந்து சினிமாவில் குணச்சித்திர வேடங்கள் கிடைத்து வந்தது. இவர், அஜித், விஜய், வடிவேல், உதயநிதி என பல முன்னணி நடிகர்களுடன் நடித்து, இதுவரைக்கும் 500க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார்.

கடந்த சில, ஆண்டுகளாக சினிமா வாய்ப்பு கிடைக்காததால் மெரினாவில் பொம்மை விற்று வாழ்க்கை நடத்தி வந்தார். மிகவும் உடல் நலிவுற்ற இவர் வயது மூப்பு காரணமாக, தனது சொந்த ஊரான கோவையில் இன்று உயிரிழந்துள்ளார். அவரது மறைவுக்கு கோலிவுட் திரை பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். அவரது திடீர் மறைவு ரசிகர்கள் மத்தியில் ஆழ்ந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here