அட கொடுமையே.. வைகைப்புயல் வடிவேலுக்கு இந்த நிலைமையா – இனி காமெடி ரோல் இல்லை!

0
அட கொடுமையே.. வைகைப்புயல் வடிவேலுக்கு இந்த நிலைமையா - இனி காமெடி ரோல் இல்லை!

எப்போதும் காமெடி நாயகனாகவே வலம் வந்து கொண்டிருந்த வடிவேலு தற்போது முதன் முறையாக தந்தை கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

மாமன்னன்:

காமெடி நட்சத்திரமாக திகழ்ந்து வரும் வடிவேலு பல ஆண்டுகளாக திரையுலகில் இருந்து விலகியே இருந்தார். அதற்கு பிறகு இயக்குநர் சுராஜ் இயக்கத்தில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமானார். இந்த திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் புகைப்படம் வெளியாகி ரசிகர்களின் ஆதரவை பெற்றது. இன்னும் சில மாதங்களில் நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் திரைப்படம் திரைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திரைப்படத்தினை தொடர்ந்து வடிவேலு, மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் மாமன்னன் என்னும் திரைப்படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.

மாமன்னன் திரைப்படத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்து வருகிறார். மேலும், இந்த திரைப்படத்தில் மலையாள நடிகர் பகத் பாசில் வில்லனாக நடித்து வருகிறார். வடிவேலு மாமன்னன் திரைப்படத்தில் எந்த கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்நிலையில், வடிவேலு உதயநிதி ஸ்டாலினுக்கு தந்தையாக நடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும்  நகைச்சுவை கதாபாத்திரத்தில் வடிவேலு நடிக்கவில்லை என்றும் தெரிவிக்கின்றனர். வடிவேலுவை lead ரோலில் எதிர்பார்த்து காத்திருந்த ரசிகர்களுக்கு இது ஏமாற்றமாக உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here