கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி : ஆகஸ்ட் 2021 க்குள் 6-7 மடங்கு அதிகரிக்கும்

0

கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி : ஆகஸ்ட் 2021 க்குள் 6-7 மடங்கு அதிகரிக்கும்

அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பு குறித்து ட்விட்டரில் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

கொரோனா பரவல் அதிகரிப்பதை கட்டுப்படுத்த தடுப்பூசி ஒன்றே தீர்வாகி உள்ள நிலையில் தடுப்பூசி தட்டுப்பாடு பல மாநிலங்களில் அதிகரித்துள்ளது. இந்தநிலையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி அதிகரிப்பு குறித்து இவ்வாறு தெரிவித்துள்ளது. “கோவாக்சின் தடுப்பூசியின் தற்போதைய உற்பத்தி திறன் 2021 மே-ஜூன் மாதத்திற்குள் இரட்டிப்பாகும், பின்னர் ஜூலை-ஆகஸ்ட் 2021 க்குள் கிட்டத்தட்ட 6-7 மடங்கு அதிகரிக்கும். இது செப்டம்பர் 2021 க்குள் மாதத்திற்கு கிட்டத்தட்ட 10 கோடி அளவை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது”.

பாரத் பயோடெக்கின் புதிய பெங்களூரு தடுப்பூசி உற்பத்தி நிறுவனத்திற்கு ரூ .65 கோடி நிதி உதவி மானியமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும் தடுப்பூசி உற்பத்தியின் திறனை அதிகரிக்க 3 பொதுத்துறை நிறுவனங்களும் ஆதரித்து வருகின்றன என்று அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகதிலிருந்து தகவல் வந்துள்ளது . எனவே கோவாக்சின் தடுப்பூசி உற்பத்தி திறன் அதிகரிப்பு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here