இனி இதற்கும் தடுப்பூசி சான்றிதழ் தேவையாம்… இன்சூரன்ஸ் நிறுவனங்கள் அதிரடி!!!

0

ஒரு குடும்பத்தின் வருவாய் ஒருவரையே சார்ந்து உள்ளது எனில் அவர் ஏதாவது ஒரு டெர்ம் இன்சூரன்ஸ் எடுத்திருக்க வேண்டும். ஏனெனில் எதிர்பாராத விதமாக ஏதேனும் நடக்க நேரிட்டால் நாம் எடுத்து வைத்து உள்ள இன்சூரன்ஸ் நமது குடும்பத்தை காக்கும். இது மிகவும் உதவியாக இருக்கும். இப்படி இருக்கையில் சில நிதி நிறுவனங்கள் இன்சூரன்ஸை பெற கொரோனா தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்களைக்  கட்டாயமாக்கி   உள்ளன.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

தற்போது உள்ள சூழ்நிலையில் எப்போது என்ன நடக்கும் என்பது யாரும் அறியாத ஒன்றாகவே உள்ளது. இப்படிப்பட்ட நிலையில் நமது குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதிப்படுத்துவது நமது கடமையே. இதனை உறுதிப்படுத்தவே குறைந்த பிரீமியம் மற்றும் அதிக பாதுகாப்புடன் வரும் ஆயுள் காப்பீட்டு திட்டம் உள்ளது. இந்த அத்தியாவசிய திட்டங்களை பெற  மேக்ஸ் லைஃப் மற்றும் டாடா ஏ.ஐ.ஏ போன்ற நிறுவனங்கள் ஒரு புது கட்டுப்பாட்டை விதித்து உள்ளது.

அதாவது, ஆயுள் காப்பீடு மற்றும் பிற காப்பீடுகளை திட்டங்களை பெற தடுப்பூசி போட்டதற்கான சான்றிதழ்கள் இருப்பதை கட்டாயமாக்கி உள்ளது. இதனால் இந்த பாலிசி எடுப்பது கடினமாக இருப்பினும் இது மக்களிடையே தடுப்பூசி போடுவதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. மேலும் மேக்ஸ் லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனம் 45 வயதிற்கு மேல் உள்ளவர்கள்  தங்களின் இறுதி தடுப்பூசி சான்றிதழ்களை காட்டினால் மட்டுமே இன்சூரன்ஸ் எடுக்க முடியும் என்ற நிலையையும் ஏற்படுத்தி உள்ளது. ஆனால் டாடா ஏஐஏ நிறுவனம் வயது எதையும்  பொருட்படுத்தவில்லை.

இந்த மாதிரியான புதிய கொள்கைகள் மற்றும் நடைமுறைகள் காப்பீட்டாளர்களின் மத்தியில்  நல்ல விஷயமாக இருந்தாலும் , தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள்  இடையில்  இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது .மேலும் இதனை  மற்ற இன்சூரன்ஸ் நிறுவனங்களும் விரைவில் பின்பற்றக்கூடும் என்ற எதிர்ப்பார்பு நிலவுகிறது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here