ஊரடங்கிலும் தடுப்பூசி போடப்படும் – அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்!!

0

தற்போதய சூழ்நிலையில் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. நோயாளிகளின் எண்ணிக்கை கூடுவதனால் ரெம்டெசிவர் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியுள்ளது. இருப்பினும் தமிழகத்தில் முழு ஊரடங்கு காலத்திலும் தடுப்பூசி போடப்படும் என அமைச்சர் கூறினார்.

விரைந்து செயல்படும் தமிழகம் :

அதிவேகமாக பரவிவரும் கோரோனோ தொற்றின் காரணமாக பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி கொண்டுள்ளது. அவ்வாறு பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை அதிகமாகி காணப்படுவதனால் ரெம்டெசிவர் மருந்துக்கு கடுமையான தட்டுப்பாடு நிலவியுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் மட்டும் கிடைக்கும் மருந்து மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படும்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு கூடுதலாக 500 படுக்கைகள் அமைக்கப்பட்டு, சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடம் கொரோனா சிகிச்சை பிரிவாக மாற்றப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு காலத்திலும் கொரோனா தடுப்பூசி போடப்படும் எனவும் 15ம் தேதிக்குள் 12,500 ஆக்சிஜன் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயாராகி விடும் என சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மக்களினை காப்பாற்றவும் கொரோனா பரவலை தடுக்கவும் அரசு எடுக்கும் அனைத்து முயற்சிகளுக்கும் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் முக்கியம் எனவும் கூறப்படுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here