மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொண்டு தடுப்பூசி முகாம் எப்பொழுது நடக்கும் – ஒன்றிய மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி??

0
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொண்டு தடுப்பூசி முகாம் எப்பொழுது நடக்கும் - ஒன்றிய மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி??
மாணவர்கள், ஆசிரியர்களுக்கு முன்னுரிமை கொண்டு தடுப்பூசி முகாம் எப்பொழுது நடக்கும் - ஒன்றிய மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி??

கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் மூட பட்டன. ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் உயர் கல்வி அளிக்கும் கல்லூரி, பல்கலைக்கழக மாணவர்களுக்கும், ஆசிரியர் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கும் முன்னுரிமை கொண்டு தடுப்பூசிகள் அளிக்க முகாம்களை ஏற்பாடு செய்யும் கோரிக்கைக்கு பதில் கூறுமாறு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஆன்லைன் வகுப்பால் மாணவர்கள் மன அழுத்தம்

கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா பரவல் அதிகம் பரவி வருகிறது. இந்த கொரோனா பரவலால் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று பள்ளிகள், கல்லூரிகள் என அனைத்து கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டன. கொரோனா பரவல் இதுவரை குறைந்தபாடு இல்லை, எனவே மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கும் என்பதால் வகுப்புகளை ஆன்லைன் மூலமாக கல்வி நிறுவனங்கள் அளித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது

ஆன்லைன் வகுப்பால் மாணவர்கள் மன அழுத்தம்
ஆன்லைன் வகுப்பால் மாணவர்கள் மன அழுத்தம்

அதில் நம் நாட்டில் 23.8% பேர்கள் அவர்களது வீட்டில் இணையதள வசதிகளை வைத்துள்ளனர் மற்றும் 10.7% வீடுகளில் கணினி, மடிகணினி பயன்படுத்தி வருகின்றனர் மற்றும் 30கோடி மக்கள் மட்டுமே ஸ்மார்ட்போன் வைத்துள்ளனர் மீதம் 100கோடி பேரிடம் அதுவும் இல்லை இதனால் பல மாணவர்களால் ஆன்லைன் வகுப்பை பெற முடியவில்லை. இத்துடன் பல்கலைக்கழக மானிய குழு விதி படி பொறியியல், சட்டம், மருத்துவம், கட்டிடக்கலை படிப்புகளின் வகுப்புகளை ஆன்லைன் மூலம் நடத்தக்கூடாது என்று தடை உள்ளது, ஆனால் அதை பின்பற்றாமல் விதிகளுக்கு எதிராக ஆன்லைன் மூலமாக வகுப்புகளை நடத்தி வருகின்றனர்.

உயர்கல்வி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை பேரில் தடுப்பூசி முகாம்
உயர்கல்வி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை பேரில்  தடுப்பூசி முகாம்
உயர்கல்வி மாணவர்கள் ஆசிரியர்களுக்கு முன்னுரிமை பேரில் தடுப்பூசி முகாம்

நேர்வழி இயக்கம் என்னும் அறக்கட்டளை சார்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடரப்பட்டுள்ளது. அதில் ஆன்லைன் வகுப்புகளின் மூலம் கல்வி கற்பிக்கும் மாணவர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகின்றனர். இதனால் 18 வயதுக்கு மேல் உயர் கல்வி பெறும் மாணவர்களுக்கும், ஆசிரியர் மற்றும் பணியாளர்களுக்கும் முன்னுரிமை அளித்து கொரோனா தடுப்பூசி முகாம்களை விரைவில் நடத்தி வகுப்புகளை மீண்டும் துவங்க வேண்டும் அதற்க்கு உத்தரவிட கோரி மனு அளித்தது. இந்த மனு பற்றி தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி விசாரித்தனர், அப்பொழுது இந்த மனுவிற்கு ஒன்றிய அரசு மற்றும் மாநில அரசும், பல்கலைக்கழக மானிய குழுவும் வரும் 14ம் தேதிக்குள் பதில் அளிக்க வேண்டும், என்று உத்தரவிட்டு விசாரணையை தள்ளிவைத்தது  உயர் நீதிமன்றம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here