மாணவர்களின் இந்த ஒரு குறையையும் நிவர்த்தி செய்த தமிழக அரசு – மக்கள் வரவேற்பு!!

0
மாணவர்களின் இந்த ஒரு குறையையும் நிவர்த்தி செய்த தமிழக அரசு - மக்கள் வரவேற்பு!!
மாணவர்களின் இந்த ஒரு குறையையும் நிவர்த்தி செய்த தமிழக அரசு - மக்கள் வரவேற்பு!!

சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் கல்லூரிக்கு வரும் மாணவர்கள் தடுப்பூசி செலுத்திக்கொண்டார்களா என்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும், செலுத்திக்கொள்ளாதவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தடுப்பூசி முகாம் :

உலகையே அச்சுறுத்தி வந்த பெருந்தொற்றாக இருந்துவருகின்றது, கொரோனா. இந்த பெருந்தொற்றால் உயிரிழந்தோரின் எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. கொரோனவை தடுக்க ஒரு பேராயுதமாக தடுப்பூசியை கண்டு பிடித்தார்கள். முதலில் தடுப்பூசி செலுத்திக்கொள்ள மக்கள் தயக்கம் காட்டினாலும் பின்னர் கொரோனாவின் தாக்கத்தை உணர்ந்த மக்கள் பின்னர் தடுப்பூசி செலுத்திக்கொள்ள தாமாகவே முன் வந்தனர்.

மாணவர்களின் இந்த ஒரு குறையையும் நிவர்த்தி செய்த தமிழக அரசு - மக்கள் வரவேற்பு!!
மாணவர்களின் இந்த ஒரு குறையையும் நிவர்த்தி செய்த தமிழக அரசு – மக்கள் வரவேற்பு!!

இதனால் கொரோனா தொற்று பாதிப்பின் எண்ணிக்கையானது குறைந்து வந்தது. மேலும் இந்தியாவில் உள்ள ஒவ்வொருவரும் இந்த கொரோனா தடுப்பூசியை செலுத்துமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். இந்தியாவில் தற்போது வரை மூன்று வகையான தடுப்பூசியானது செலுத்தப்பட்டு வருகிறது. அதாவது கோவிஷில்டு, கோவாக்சின், ஸ்புட்னிக் வி ஆகிய தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன.

மாணவர்களின் இந்த ஒரு குறையையும் நிவர்த்தி செய்த தமிழக அரசு - மக்கள் வரவேற்பு!!
மாணவர்களின் இந்த ஒரு குறையையும் நிவர்த்தி செய்த தமிழக அரசு – மக்கள் வரவேற்பு!!

இருப்பினும் இந்தியாவில் சில மாநிலங்களில் தடுப்பூசியின் பற்றாக்குறையானது இருந்து கொண்டே வருகிறது. இதனால் மக்கள் மருத்துவமனைக்கு சென்றும் தடுப்பூசி செலுத்திக்கொள்ளாமல் ஏமாற்றத்துடன் செல்லும் அவலம் ஏற்பட்டு வருகிறது. இதில் மாணவர்களும் அடங்குவர். ஆனால் இந்த குறையை களையும் நோக்கில் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் ஒரு தகவலை விடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது, “கல்லூரிக்கு வரும் அனைத்து மாணவர்களும் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என்பதை உறுதி செய்து கொள்ளவேண்டும் என்றும், தடுப்பூசி செலுத்திக்கொள்ளாத மாணவர்களுக்கு கல்லூரிகளிலேயே தடுப்பூசி முகாமானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது” என்றும் கூறியுள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பு பெற்றோர்களிடத்தில் பெரும் வரவேற்ப்பை பெற்றுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here