துணிவா? வாரிசா?.., பொங்கல் ரேஸில் முதலிடத்தை பிடித்த வசூல் சக்கரவர்த்தி இவர் தான்!!

0
துணிவா? வாரிசா?.., பொங்கல் ரேஸில் முதலிடத்தை பிடித்த வசூல் சக்கரவர்த்தி இவர் தான்!!
துணிவா? வாரிசா?.., பொங்கல் ரேஸில் முதலிடத்தை பிடித்த வசூல் சக்கரவர்த்தி இவர் தான்!!

நடிகர் விஜய் மற்றும் அஜித் நடித்த வாரிசு, துணிவு திரைப்படம் வெளியான நிலையில், வசூல் சக்கரவர்த்தி யார் என்று சோசியல் மீடியாவில் ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

வாரிசு – துணிவு:

தென்னிந்திய தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக ஜொலித்து வருபவர்கள் தான் நடிகர் அஜித் மற்றும் விஜய். விஜய் நடிப்பில் வாரிசு திரைப்படம் அஜித் நடிப்பில் துணிவு திரைப்படம் உருவாகியுள்ளது. எட்டு வருடங்களுக்கு பிறகு அஜித், விஜய் படங்கள் ஒரே நாளில் வெளியாகி இருப்பது தல தளபதி பொங்கல் என ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

மேலும் கட் அவுட், பாலபிஷேகம் ஆட்டம் பாட்டம் ஆரவாரம் என அலப்பறை கொடுத்து முதல் நாளிலே க்ராண்ட் ஓப்பனிங் கொடுத்து மாஸ் காட்டியுள்ளனர் அஜித், விஜய் ரசிகர்கள். இயக்குனர் வம்சி சென்டிமென்ட் கதையை எடுத்திருந்தாலும் நக்கல் நையாண்டி என ஜாலியான வின்டேஜ் விஜய்யை படத்தில் காட்டி ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்திருக்கிறார்.

அய்யோ.., உங்கள இந்த லூக்குல பாக்க ரெண்டு கண்ணு பத்தாது? நிவேதா பெத்துராஜ் அழகில் மயங்கிய இளசுகள்!!!!

அதே போல் இயக்குனர் வினோத் சோசியல் மெசேஜ் கதையை எடுத்திருந்தாலும், வில்லத்தனமான சிரிப்பு, மைக்கேல் ஜாக்சன் மூமென்ட் என அஜித்தை வேறு கோணத்தில் காட்டி ரசிகர்களின் இதயங்களை கொள்ளை அடித்துள்ளார். இந்த இரண்டு படங்களும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்துள்ளது.

சமீபத்தில் ட்ரைலரில் வாரிசை, துணிவு முந்தியதை போலவே, முதல் நாள் வசூலிலும் துணிவு முந்தியுள்ளது. அதாவது விஜயின் வாரிசு திரைப்படம் 20 கோடி 70 லட்சம் வசூலித்த நிலையில், அஜித்தின் துணிவு திரைப்படம் 21 கோடி 60 லட்சம் வசூலித்து பொங்கல் ரேஸில் முதலிடத்தில் உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here