கொரோனா ஊரடங்கு: வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டும் கடைகளை திறக்கலாம் – மாநில அரசு அனுமதி!!!

0

உத்தரகாண்ட் மாநிலம் கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை ஜூன் 9 ஆம் தேதி வரை நீடித்துள்ளது. மளிகைக் கடைகள் வாரத்தில் இரண்டு நாட்கள், அதாவது ஜூன் 1 மற்றும் ஜூன் 7ம் தேதிகளில் திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உத்தரகாண்ட் அரசு ஜூன் 9, காலை 6 மணி வரை கொரோனா ஊரடங்கு கட்டுப்பாடுகளை நீடித்துள்ளது. மளிகை கடைகள் ஜூன் 1 மற்றும் ஜூன் 7 ஆகிய தேதிகளில், வாரத்தில் 2 நாட்கள் காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்கப்படும். ஜூன் 1 ஆம் தேதி மட்டுமே புத்தகங்கள் மற்றும் எழுதுபொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப்படும்.

மத்திய சுகாதார அமைச்சகம் பகிர்ந்துள்ள சமீபத்திய தகவல்களின்படி, உத்தரகண்ட் மாநிலத்தில் தற்போது 30,000 க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் உள்ளனர். மேலும் 6,400 க்கும் மேற்பட்டோர் இந்த கொடிய நோயால் இறந்துள்ளனர். அதே நேரத்தில் 2.91 லட்சம் பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ளனர். சில வாரங்களுக்கு முன்பு, உத்தரகாண்ட் முதல்வர் தீரத் சிங் ராவத், கொரோனாவின் மூன்றாவது அலைகளை கையாள அம்மாநில அரசு தயாராக இருப்பதாக உறுதியளித்திருந்தார்.

உத்தரகாண்டில் மே 13 ஆம் தேதி முதல் ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலில் உள்ளது. கொரோனாவால் மரணம் அடையும் பத்திரிகையாளர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என்றும், கொரோனாவுக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் அதற்குரிய பணத்தை அரசு வழங்கும் என்றும் உத்தரகாண்ட் அரசு அறிவித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here