வட இந்தியாவில் பரவும் மர்ம காய்ச்சல்.. 60க்கும் மேற்பட்டோர் பலி – பீதியில் மக்கள்!!

0
உத்தர பிரதேசத்தில் பரவி வரும் மர்ம காய்ச்சலால் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். இது அப்பகுதி மக்கள் மட்டும் அல்லாமல் ஒட்டு மொத்த இந்திய மக்களையே பீதியில் உறையவைத்துள்ளது.
கடந்த 2 வருடங்களாகவே இந்தியாவின் மருத்துவ உள்கட்டமைப்புக்கு கொரோனா நோய் தொற்று ஆட்டம் காண்பித்து வருகிறது. இதில் மற்ற உலக நாடுகளும் விதிவிலக்கல்ல. இன்றளவும் இக்கொடிய நோய் தொற்றின் தாக்கம் ஓயாமல் அடுத்தடுத்த அலையாக நீண்டுகொண்டேதான் உள்ளது.
தற்போது மூன்றாம் அலையை பற்றிய அச்சம் மக்கள் மனதில் வேறுன்றி உள்ளது. இதற்கு ஏற்ப தொற்று பரவல் வேகமும் இந்தியாவின் பல மாநிலங்களில் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் மற்றொரு மர்ம காய்ச்சல் உத்தர பிரதேசத்தில் பரவி வருகிறது.

இந்த மர்ம காய்ச்சலால் இதுவரை 60க்கும் மேற்பட்டோர் உயிர் இழந்துள்ளனர். குழந்தைகள் அதிகம் தாக்கப்படுவதால் சுகாதார நிபுணர் குழுவை உத்தர பிரதேசத்திற்கு அனுப்பிவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அம்மாநிலத்தில் அதிகரிக்கும் இந்நோய் ஒட்டு மொத்த இந்தியாவிற்கும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here