உ.பி யில் 7 வகையான கொரோனா வகைகள் கண்டுபிடிப்பு.. ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!!!

0

உத்தரப்பிரதேசத்தின் தற்போது 7 வகையான கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளன. சிசிஎன்பி என்ற நிறுவனம் வாரணாசி நகரில்  130 பேரை கொண்டு ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வில் 7 வகையான உருமாறிய கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

உருமாறிய கொரோனா வைரஸ் முதல் முறையாக இங்கிலாந்தில்  கண்டெடுக்கப்பட்டது. பின்னர் இந்தியாவில் உருமாறிய கொரோனா வைரஸ் (B.1.1.7) கண்டறியப்பட்ட பின்னர், தங்கள் நாடுகளில் இதே பாதிப்பு வந்துவிடக் கூடாது என்பதற்காக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் போக்குவரத்துகளில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

மேலும், பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகளில் உருமாற்றம் அடைந்த வைரஸ்கள் கண்டறியப்பட்டன. தற்போது உத்தர பிரதேசத்தில் வாரணாசியில் 7 கொரோனா வகைகள் கண்டறியப்பட்டுள்ளது.சிசிஎன்பி மேற்கொண்ட ஆய்வில் 35% பேருக்கு டெல்டா வகை வைரஸ் தொற்று இருப்பதாகவும் தென்னாப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட பி 1 351 வகை கொரோனா வைரஸ்களும் வாரணாசியில் கண்டறியப்பட்டு இருப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பெரும்பாலான இந்திய மாநிலங்களில் கொரோனா பரவலின் வேகம் அதிகம் இருப்பதற்கு டெல்டா மற்றும் பீட்டா வகை வைரஸ்களே காரணம் என்று அந்த ஆய்வில் தெரிய வந்திருக்கிறது.இது இந்திய மக்கிடையே கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here