மர்ம முறையில் இறந்து கிடந்த 2 புலிகள்.., விளக்கம் கொடுத்த வனத்துறையினர்!!

0

அவலாஞ்சி வனப்பகுதியில் இரண்டு புலிகள் மர்மமான முறையில் இறந்து கிடந்தது வனத்துறையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் இது தொடர்பாக வனத்துறையினர் விளக்கம் கொடுத்துள்ளனர். அதில் இறந்து கிடந்த இரண்டு புலிகளும் பெண் இனத்தை சார்ந்தவை. மேலும் ஒரு புலி வாய்க்காலில் இறந்து கிடந்தது. மற்றொரு புலி வாய்க்காலின் மேல் கரையில் இருந்தது.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

ஆனால் இரண்டு புலிகளின் உடல்களிலும் எந்த காயங்களும் இல்லை இரண்டு நாட்களுக்கு முன் இரண்டும் இறந்திருக்கலாம். இந்த இரண்டு புலிகளும் விஷம் குடித்து இறந்திருக்கலாமோ என களத்தில் தணிக்கை செய்யப்பட்டு வருகிறது. மேலும் தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி இன்று 10.9.2023 காலை பிரேத பரிசோதனை செய்யப்படும். அதன் பின்னரே புலிகள் இறந்ததற்கு உண்மையான காரணம் தெரிய வரும் என்று கூறியுள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here