உலக தடகள போட்டிகளில் 10 ஆண்டுகளாக முறியடிக்கப்படாத சாதனையுடன் வலம் வரும் ஜமைக்காவைச் சேர்ந்த வீரர் உசைன்போல்டுக்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது.
மின்னல் வேக வீரர்:
ஜமைக்காவின் உசைன் போல்ட் உலக தடகள போட்டிகளில் 11 தங்கமும், ஒலிம்பிக் போட்டிகளில் 8 தங்கப்பதக்கமும் பெற்றுள்ளார். 100 மீ ஓட்டத்தை 9.58 வினாடிகளில் கடந்து உலக சாதனை படைத்துள்ளார். கடந்த 2017ம் ஆண்டு உசைன் போல்ட் தடகள போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று குடும்ப வாழ்க்கையை தொடங்கினார்.
33 வயதான போல்ட், 30 வயதான காசி பென்னட் என்கிற தனது காதலியுடன் குடும்ப வாழ்க்கையைத் தொடங்கினார். கர்ப்பமாக இருந்த அவரது மனைவிக்கு அழகான பெண் குழந்தை பிறந்து உள்ளது. அப்பா ஸ்தானத்தை எட்டியுள்ள உசைன் போல்ட்டிற்கு ஜமைக்கா பிரதமர் உட்பட உலகமெங்கும் உள்ள ரசிகர்கள் சமூக வலைதளங்கள் மூலம் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |