இவ்ளோ உயிர்களை காவு வாங்கியது பத்தலயா..வெட் மார்க்கெட்டுகளை உடனே மூட வேண்டும் – சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை..!

0

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது உலகம் முழுவதும் பரவி பெரும் அச்சத்தை ஏற்படுத்தி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க எம்.பி.க்கள் வெட் மார்க்கெட்டுகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா..!

சீனாவின் வூஹானில் கடல் மாமிச உணவு விற்கும் சட்ட விரோத சந்தையிலிருந்துதான் நுவல் கொரோனா வைரஸ் பரவியிருப்பதாக சீனாவின் நோய்க்கட்டுப்பாடு மற்றும் தடுப்புப் பிரிவு இயக்குநர் காவோ ஃபூ தெரிவித்தார். கொரோனா வைரஸ் விலங்கிலிருந்துதான் மனிதருக்குப் பரவியிருக்கிறது என்று திட்டவட்டமாக நம்பப்படுகிறது ஆனால் சீனா அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை. இந்நிலையில் சீனாவுக்கு அமெரிக்க எம்.பி.க்கள் உடனடியாக வெட் மார்க்கெட்டுகளை மூடுமாறு வலியுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா எச்சரிக்கை..!

அமெரிக்காவின் கொரோனா ஒழிப்பு ஒருங்கிணைப்பாளர் மற்றும் தொற்று நோய் நிபுணரான டாக்டர் ஃபாஸி இந்த வெட் மார்க்கெட்டுகளை மூட வேண்டும் என்று வலியுறுத்தினார்.

சீனா உடனடியாக வெட் மார்க்கெட்டுகளை மூட வேண்டும் ஏகப்பட்ட நோய்கள் மனித-விலங்கு ஊடாட்டங்களால் ஏற்படும் அதை எப்படி திறந்து வைக்கின்றனர் என்பது என்னை ஆச்சரியப்பட வைக்கிறது இன்னும் என்னதான் நடக்க வேண்டும்? இன்னும் எத்தனை உயிர்கள் போக வேண்டும்? அவர்கள் இந்தச் சந்தைகளை மூட. நாம் இன்று அனுபவித்து வரும் துன்பம் அந்தச் சந்தைகளினால்தான்” என்று டாக்டர் ஃபாசஸி கடுமையாக விமர்சித்துள்ளார்.

வைரஸ் நிபுணர் பீட்டர் டஸாக்..!

வெட் மார்க்கெட்டுகள் மனிதர்களுக்கு அருகில் உள்ளது இங்கு வைரல் சுமை அதிகம். அங்கு நூற்றுக் கணக்கில் ஆயிரக்கணக்கில் விலங்குகளும் பண்ணைகளும் உள்ளன. வைரஸ் இன்னமும் கூட அங்கு இருக்கலாம். ஆகவே நாம் இதிலிருந்து மீண்டு வந்தாலும் இந்த வைரஸ் மீண்டும் வெடிக்கத் தயாராக இருக்கிறதா என்பதை நாம் கூர்ந்து கவனிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here