நடப்பு ஆண்டிற்கான “ஜி 20 உச்சி மாநாடு” டெல்லியில் கடந்த இரு தினங்களாக (செப்டம்பர் 9 & 10) நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெல்லிக்கு வருகை தந்திருந்தார். அப்போது நேரில் சென்று வரவேற்று உபசரித்த பிரதமர் மோடி, அவருடன் ஆலோசனை மேற்கொண்டார். இந்த நிலையில் G20 மாநாடு முடித்து வியட்நாம் சென்ற அமெரிக்க அதிபர் ஜோ பைடனிடம், பிரதமர் மோடி குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதற்கு பதிலளித்த அவர், “கடந்த ஜூன் மாதம் வெள்ளை மாளிகைக்கு பிரதமர் மோடி வருகை தந்திருந்த போதே, இந்தியாவில் உள்ள ஊடக சுதந்திரம் மற்றும் மனித உரிமை மீறல்கள் குறித்து எனக்கு கவலையாக உள்ளது என தெரிவித்து இருந்தேன்.” என கூறியுள்ளார். இந்த பதில் இந்திய மக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தி வருகிறது.