அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் முறையாக 2-வது சுற்றுக்கு முன்னேறிய வீரர் வூ யிபிங்!

0
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் முறையாக 2-வது சுற்றுக்கு முன்னேறிய வீரர் வூ யிபிங்!
அமெரிக்க ஓபன் டென்னிஸ்: முதல் முறையாக 2-வது சுற்றுக்கு முன்னேறிய வீரர் வூ யிபிங்!

சீன வீரர் வூ யிபிங் முதன் முறையாக அமெரிக்க ஓபன் டென்னிஸ் சுற்றில் சிறப்பாக விளையாடி அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளார்.

சீன வீரர் அசத்தல்!

ஆண்டுதோறும் நான்கு வகையான கிராண்ட்ஸ்லாம் என்ற உயரிய அந்தஸ்து பெற்ற டென்னிஸ் போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி ஆஸ்திரேலிய ஓபன், பிரெஞ்ச் ஓபன், விம்பிள்டன் போட்டிகள் முடிவடைந்து விட்டது. இதனை தொடர்ந்து ஆண்டின் கடைசியில் கிராண்ட்ஸ்லாம் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடர் நியூயார்க் நகரில் இன்று தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் பிரிவுக்கான முதல் சுற்று போட்டி அரங்கேறி நடைபெற்றது.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதில் சீன வீரர் வூ யிபிங், உலகின் 31 வது நிலை வீரரான ஜார்ஜியாவைச் சேர்ந்த நிகோலோஸ் பசிலாஷ்விலியை எதிர்கொண்டார். இதில் சிறப்பாக விளையாடிய சீன வீரர் 6-3, 6-4, 6-0 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அடுத்த கட்டத்துக்கு முன்னேறியுள்ளார். இதன் மூலம் கடந்த 1959 ஆண்டு விம்பிள்டன் போட்டியில் சீன வீரர் மெய் ஃபூ சி, ஒரு போட்டியில் வென்றிருந்தார். அதன் பின் தற்போது வரை யாரும் கிராண்ட் ஸ்லாம் போட்டிகளில் வெற்றி பெறவில்லை. இந்நிலையில் நீண்ட நாள் கழித்து சீன வீரர் வூ யிபிங் 2வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here