காலிறுதிக்கு முன்னேறிய காஃப் – NO 1 வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்!

0
காலிறுதிக்கு முன்னேறிய காஃப் - NO 1 வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்!
காலிறுதிக்கு முன்னேறிய காஃப் - NO 1 வீராங்கனையை வீழ்த்தி அசத்தல்!

அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் முதல் முறையாக காஃப், ஆன்ஸ், கார்சியா, அய்லா, நிக் போன்ற வீராங்கனைகள் காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளனர்.

USA ஓபன்:

அமெரிக்காவில் USA ஓபன் டென்னிஸ் தொடர் கோலாகலமாக அரங்கேறி வருகிறது. இதில் பல வீரர்கள் சிறப்பாக விளையாடி காலிறுதிக்கு முன்னேறியுள்ளனர். அதே போன்று தான் பெண்களுக்கான டென்னிஸ் தொடருக்கான ஆட்டத்தில் சிறப்பாக விளையாடி பல வீராங்கனைகள் முதன் முறையாக கால் இறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளனர். அதில் மகளிர் ஒற்றையர் பிரிவில் அமெரிக்க வீராங்கனை கோரி காஃப், சீன வீராங்கனை சுயாய் ஜங்கை எதிர்கொண்டார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதில் சிறப்பாக விளையாடிய கோரி காஃப் 7-5, 7-5 என நேர் செட்களில் வீழ்த்தி முதன் முறையாக கிராண்ட்ஸ்லாம் போட்டிக்கான காலிறுதி ஆட்டத்திற்கு முன்னேறியுள்ளார். இதனை தொடர்ந்து நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு 4வது சுற்று ஒன்றில் உலகின் நம்பர் ஒன் வீரரான ரஷ்யாவின் டேனில் மெத்வதேவ், ஆஸ்திரேலிய வீரர் நிக் கிர்ஜியோஸை எதிர்கொண்டார். இருவருக்கு இடையில் நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 7-6,13-11, 3-6, 6-3, 6-1 என்ற செட்களில் நம்பர் ஒன் வீரரை வீழ்த்தி நிக் கிர்ஜியோஸ் அடுத்த கட்டத்திற்கு முன்னேறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here