காலிறுதியில் பெகுலாவை வீழ்த்திய போலந்து வீரர்.., அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் வெற்றி!!

0
காலிறுதியில் பெகுலாவை வீழ்த்திய போலந்து வீரர்.., அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் வெற்றி!!
காலிறுதியில் பெகுலாவை வீழ்த்திய போலந்து வீரர்.., அரையிறுதிக்கு முன்னேறி அசத்தல் வெற்றி!!

உலகின் நம்பர் ஒன் வீராங்கனையான இகா ஸ்வியாடெக் அமெரிக்க ஓபன் டென்னிஸ் தொடரில் காலிறுதிக்கான ஆட்டத்தில் பெகுலாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறியுள்ளார்.

யுஎஸ் ஓபன் 2022!

இந்த ஆண்டின் நான்காவது மற்றும் கடைசி கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடரில் பெண்களுக்கான ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் போலந்தின் NO.1 வீராங்கனையான இகா ஸ்வியாடெக், அமெரிக்காவின் ஜெசிகா பெகுலாவை எதிர்கொண்டார். இதில் ஜெசிகா சொந்த மண்ணில் வெற்றி பெற கடுமையாக போராடினார்.

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

இதில் ஜெசிகா சொந்த மண்ணில் வெற்றி பெற கடுமையாக போராடினார். ஆனால் அதற்கு சற்றும் இடம் கொடுக்காத இகா ஸ்வியாடெக், 6-3, 7-6(4) என்ற செட் கணக்கில் அமெரிக்க வீராங்கனையை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறி அசத்தியுள்ளார். இதற்கு முன்னர் நடைபெற்ற ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் ஓன்ஸ் ஜபீர், ஆஸ்திரேலியாவின் ஏ. டாம்லஜனோவிக்கை எதிர்கொண்டார்.

இதில் சிறப்பாக விளையாடிய ஓன்ஸ் 6 – 7, 4 – 6, (7 – 4 ) என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்குள் தகுதி பெற்றார். காலிறுதி ஆட்டத்தின் முடிவில் யு.எஸ். ஓபன் மகளிர் ஒற்றையர் பிரிவு அரையிறுதியில் இகா ஸ்வியாடெக் – அரினா சபலென்கா, ஓன்ஸ் ஜபேர் – கரோலினா கார்சியாவையும் எதிர்கொள்ள உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here