பழிக்கு பழி வாங்கிய அமெரிக்கா – தீவிரவாதிகள் மீது தாக்குல்.. முக்கிய தளபதி பலி!!

0

காபூல் விமான நிலையத் தாக்குதலுக்கு பழிவாங்கும் நடவடிக்கையாக ஆப்கானில் உள்ள ஐ.எஸ் தீவிரவாதிகள் முகாம்கள் மீது ஆளில்லா ட்ரோன்கள் மூலம் அமெரிக்கா தாக்குதல் நடத்தி பழிக்கு பழி வாங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தான் நாட்டை தாலீபான்கள் கைப்பற்றிய பிறகு தங்கள் நாட்டு குடிமக்களை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் அங்கிருந்து மீட்டு வருகின்றன. இத்தகைய மீட்பு பணிகள் காபூல் விமான நிலையத்தில் இருந்து நடைபெறுகிறது. ஆனால் மீட்புப்பணிகள் நடைபெற்று வரும் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ். பயங்கரவாதிகள் வியாழக்கிழமை (26, ஆகஸ்ட்,2021) குண்டு வெடிப்பு நடத்தினர்.

இந்த தாக்குதலில் அப்பாவி மக்கள் உள்பட பல அமெரிக்க படையினர் உயிர் இழந்துள்ளனர். தற்போது வரை இந்த தாக்குதலில் பலியானோர் எண்ணிக்கை 170 ஐ கடந்துள்ளது. இதற்கு கடும் கண்டனம் தெரிவித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன். இந்நிலையில் அமெரிக்கா இந்த சம்பவத்திற்கு ஐ.எஸ் தீவிரவாதிகளை பழி வாங்கியுள்ளது.

ஆப்கானிஸ்தானில் ஐ.எஸ். அமைப்பின் கோராசன் பயங்கரவாதிகளை குறிவைத்து தாக்குதலை நடத்தியுள்ளது அமெரிக்கா. ட்ரோன் மூலம் பயங்கரவாதிகள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இதில் அந்த தீவிரவாத அமைப்பின் முக்கிய தளபதி கொல்லப்பட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here