Wednesday, April 24, 2024

UPSC தேர்வுகளை ஒத்திவைக்க கோரிய மனு – பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!!

Must Read

வரும் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடக்கவிருக்கும் UPSC முதல்நிலை தேர்வுகளை ஒத்திவைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை அடுத்து UPSC பதிலளித்து பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

UPSC முதல்நிலை தேர்வு:

வரும் அக்டோபர் 4 ஆம் தேதி UPSC தேர்வாணையம் நடத்தும் முதல்நிலை தேர்வு நடக்க உள்ளது. ஆனால், இன்னும் கொரோனா பரவல் கட்டுக்குள் வராத நிலையில், பல மாணவர்கள் தங்களால் தேர்வினை சந்திக்க முடியாது என்ற காரணத்தால் தேர்வினை ஒத்தி வைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றினை தொடுத்தனர்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

upsc
upsc

இந்த வழக்கினை நீதிபதிகள் ஏ. எம். கன்வில்கர் மற்றும் சஞ்சீவ் கண்ணா அமர்வு விசாரித்து வருகிறது. தேர்வுகளை மேலும் ஒத்திவைக்க முடியாது என்று UPSC சார்பில் வாதிடப்பட்டது.

UPSC மறுப்பு:

காரணம், செப்டம்பர் 30 ஆம் தேதி நடைபெற இருந்த தேர்வுகளை தான் UPSC அக்டோபர் 4 ஆம் தேதிக்கு மாற்றியது. இதனால் தேர்வுகளை மேலும் ஒத்திவைக்க முடியாது என்று கூறப்பட்டது. ஆனால், மனுதாரர்கள் சார்பில் கூறப்பட்டது என்னவென்றால், மழைக்காலம் தற்போது ஆரம்பித்துள்ளது, குறிப்பாக வடமாநிலங்களில் வெள்ள பாதிப்பு அதிகமாக உள்ளது.

சென்னையில் தீவிரமாக பரவும் டெங்கு, மலேரியா – அச்சத்தில் பொதுமக்கள்!!

இதனால் தேர்வினை எழுத முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் UPSC 2020 தேர்வுகளை இன்னும் 2 அல்லது 3 மாதங்களுக்கு ஒத்திவைத்தால் தேர்வர்களுக்கு வசதியாக இருக்கும் என்று கூறியுள்ளனர்.

உச்சநீதிமன்ற தீர்ப்பு:

ஆனால், UPSC சார்பில் மறுக்கப்பட்டு வருவதால், உச்சநீதிமன்றம் இந்த விவகாரம் குறித்து UPSC மற்றும் மத்திய அரசு பதிலளிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அதே போல் UPSC பதிலளித்து பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!!

TNPSC குரூப் 2, 2A தேர்வுக்கான மாஸ் அப்டேட்., இந்த தேதியில் தான் பிரிலிம்ஸ்? அரிய வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!! தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் (TNPSC) பல்வேறு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -