அகில இந்திய அளவிலான UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு., முதல் 4 இடத்திலும் பெண்கள் தான்!!!

0
அகில இந்திய அளவிலான UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு., முதல் 4 இடத்திலும் பெண்கள் தான்!!!
அகில இந்திய அளவிலான UPSC தேர்வு முடிவுகள் வெளியீடு., முதல் 4 இடத்திலும் பெண்கள் தான்!!!

மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்எஸ் உள்ளிட்ட 1,022 பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை UPSC தேர்வாணையம் கடந்த ஆண்டு அறிவித்தது. இதில் முதல் நிலை தேர்வு, பிரதான தேர்வு மற்றும் நேர்முக தேர்வு என 3 படிநிலைகளிலான தேர்வுகள் கடந்த மே மாதம் வரை நடைபெற்றது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இதைத்தொடர்ந்து UPSC தேர்வுக்கான இறுதி முடிவுகள் இன்று https://www.upsc.gov.in/ என்ற இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இதில் IAS பதவியில் 180 பேரும், IPS பதவியில் 200 பேரும் என மொத்தமாக 933 தேர்வர்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர். முதலிடத்தில் இஷிதா கிஷோர், 2ம் இடத்தில் கரிமா லோஹியா, 3 ம் இடத்தில் உமா ஹராதி, 4வது ஸ்மிருதி மிஸ்ரா என முதல் 4 இடங்களை பெண் தேர்வர்களே பெற்றுள்ளனர்.

தமிழக மாணவர்கள் கவனத்திற்கு.., ‘புதியன விரும்பு- 2023’ முகாம்.., துவக்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்!!!

இதையடுத்து வெற்றி பெற்றவர்களுக்கு மத்திய மாநில அரசு தலைவர்கள் உட்பட பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்த ஆண்டுக்கான UPSCன் முதல்நிலைத் தேர்வு மே 28ஆம் தேதி நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here