UPSC சிவில் சர்வீஸ் தேர்வு முடிவுகள் வெளியீடு – தமிழக மாணவர் 7ம் இடம்!!

0

சிவில் சர்வீசஸ் தேர்வு 2019 முடிவுகளை யூனியன் பப்ளிக் சர்வீஸ் கமிஷன் (யு.பி.எஸ்.சி) அறிவித்துள்ளது. தேசிய அளவில் பிரதீப் சிங் தேர்வில் முதலிடம் பிடித்தார். பெண்களில் பிரதீபா வர்மா முதலிடம் வகிக்கிறார்.

UPSC சிவில் சர்வீஸ் முடிவுகள்:

2019ம் ஆண்டு நடைபெற்ற சிவில் சர்வீஸ் தேர்வில் 829 மாணவர்கள் எழுதினர். தற்போது இந்த தேர்வின் இறுதி முடிவு யு.பி.எஸ்.சியின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கிடைக்கிறது. 2019 செப்டம்பரில் நடைபெற்ற சிவில் சர்வீசஸ் தேர்வு, 2019 மற்றும் பிப்ரவரி-ஆகஸ்ட், 2020 இல் நடைபெற்ற நேர்காணல்கள் பகுதியின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட வெற்றியாளர்களின் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

2019 ஆம் ஆண்டில் முதன்முறையாக சிவில் சர்வீசஸ் தேர்வில் நடைமுறைப்படுத்தப்பட்ட EWS ஒதுக்கீட்டைப் பெற்றவர்களில் 78 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மேலும் 11 வேட்பாளர்களின் முடிவு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த கணேஷ்குமார் பாஸ்கர் தேசிய அளவில் 7ம் இடமும், தமிழக அளவில் முதல் இடமும் பிடித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம் – TNPEF அறிவிப்பு!!

இந்திய நிர்வாக சேவை, இந்திய வெளியுறவு சேவை, இந்திய போலீஸ் சேவை மற்றும் பிற மத்திய சேவைகளுக்கு அதிகாரிகளை தேர்ந்தெடுப்பதற்காக யுபிஎஸ்சி ஒவ்வொரு ஆண்டும் சிவில் சர்வீசஸ் தேர்வை நடத்துகிறது. சிவில் சர்வீசஸ் தேர்வு 2020ம் ஆண்டு தேர்வு மே 31 அன்று நடைபெற திட்டமிடப்பட்டது. கொரோனா வைரஸ் நெருக்கடியைக் கருத்தில் கொண்டு அக்டோபர் 4 ஆம் தேதிக்கு தேர்வு மாற்றப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here