இந்தியாவில் டிஜிட்டல் வளர்ச்சிக்கேற்ப வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களுக்கு பல்வேறு வசதிகளை அறிமுகப்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் வங்கி கணக்கில் பணம் இல்லாவிட்டாலும் UPI Now, Pay Later எனும் பணம் செலுத்தும் வசதியை அறிமுகப்படுத்தி வருகின்றனர். தற்போது HDFC மற்றும் ICICI வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களின் கிரெடிட் லைன் (Credit Line) அடிப்படையில் ரூ.50,000 வரை வழங்குகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வழங்கப்பட்ட தொகையை QR ஸ்கேன் செய்து UPI மூலம் பணம் செலுத்தலாம். பின்னர் குறிப்பிட்ட காலத்திற்குள் பயன்படுத்திய தொகையை திரும்ப செலுத்தவும் அறிவுறுத்தி உள்ளனர்.. இந்த புதிய வசதி பெரும்பாலானோர்க்கு மாத கடைசியில் பயன்படுவதால் நல்ல வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.