
தொடர்ந்து மாறி வரும் பருவ நிலை மாற்றம் காரணமாக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்த வகையில், உத்திரப் பிரதேச மாநிலத்தில் இடைவிடாமல் மழை பெய்து வருவதால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்த முக்கிய அப்டேட்டை UP அரசு வெளியிட்டுள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அதாவது, உத்திரப்பிரதேச தலைநகர் லக்னோவை தவிர்த்து மற்ற பல மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. இதில் குறிப்பாக பாரபங்கி, கோண்டா, பஹ்ரைச் உள்ளிட்ட மாவட்டங்கள் மழையால் அதிக அளவில் பாதிக்கப்பட்டுள்ளதால், பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு இன்று (செப்டம்பர் 13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும், அடுத்து வரும் தினங்களில் பள்ளி திறப்பை குறித்து அறிய அந்தந்த பள்ளிகளை மாணவர்கள் தொடர்பு கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இறந்துபோன மாரிமுத்துவின் தீராத ஆசை.., நிராசையாய் போன கண்கலங்க வைத்த சம்பவம்!!