மாநில குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு – ரேஷன் கார்டை திரும்ப பெற உத்தரவு? அரசு விளக்கம்!!

0
குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ரேஷன் பொருள் விநியோகத்தில் மாற்றம்! அடுத்த மாதம் முதல் அமல்!!
மாநில குடும்ப அட்டைதாரர்கள் கவனத்திற்கு - ரேஷன் கார்டை திரும்ப பெற உத்தரவு? அரசு விளக்கம்!!

உத்தரப்பிரதேசத்தில், தகுதியற்ற நபர்கள் ரேஷன் கார்டு பெறுவதை தடுக்க, ரேஷன் கடை திரும்பப் பெற உத்தரவிட்டிருப்பதாக வெளியான தகவல் குறித்து மாநில ஆணையாளர்  விளக்கமளித்துள்ளார்.

 ஆணையாளர் விளக்கம் :

இந்தியாவில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், பயனாளிகளுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இதையடுத்து புலம்பெயர் தொழிலாளர்களுக்காக, மத்திய அரசு ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு என்ற திட்டத்தை கடந்த ஆண்டு கொண்டு வந்தது. இந்த நிலையில், ரேஷன் பொருட்கள் பெறுவதில் ஏற்படும் முறைகேட்டை தடுக்க பயோமெட்ரிக் முறை அரசு அறிமுகப்படுத்தியது. இந்த நிலையில், தகுதியற்ற நபர்கள் ரேஷன் பொருட்கள் பெறுவதை தடுக்க உத்தரப்பிரதேச மாநிலத்தில் தகுதியற்ற நபர்கள், ரேஷன் கார்டுகளை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டதாக தகவல் வெளியானது.

அப்படி ஒப்படைக்கதோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் வெளியானது. இது குறித்து விளக்கமளித்த அம்மாநில உணவுத்துறை ஆணையாளர் இதுபோன்ற எந்த உத்தரவையும் அரசு வெளியிடவில்லை என்றும், இந்த வதந்தியை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். அதுபோல, சட்டம் 2003 இன் படி  தகுதியற்ற நபரிடமிருந்து ரேஷன் கார்டை பெற எந்த விதியும் இல்லை என தெரிவித்தார். இதனால் பயனாளிகள் சற்று ஆறுதல் அடைந்து உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here