ரூ.2500க்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் – உபி மருத்துவமனை மோசடி!!

0

இந்தியாவில் கொரோனா வைரஸின் தாக்கம் தீவிரமடைந்து வருகிறது. இந்நிலையில் இதனை பயன்படுத்தி பணம் சம்பாரிக்கும் நோக்கில் பலர் செயல்படுகின்றனர். அதுபோன்றதொரு மோசடி உத்திரப்பிரதேச மாநிலத்தில் நடைபெற்று உள்ளது.

கொரோனா நெகட்டிவ்:

கொரோனா வைரஸ் நெருக்கடியைச் சமாளிக்க உதவும் முயற்சியில் மருத்துவர்கள் மற்றும் மருத்துவமனைகள் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருகின்றன.சில தனியார் மருத்துவமனைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டு, சிகிச்சை அளித்து வருகின்றன. அதன் கட்டணத்தை அரசு நிர்ணயம் செய்துள்ளது.

இருப்பினும், உத்தரபிரதேசத்தில் உள்ள ஒரு மருத்துவமனை இந்த கடினமான நேரத்திலும் போலி சான்றிதழ் வழங்கி வருகிறது. இதற்கு ரு.2500 கட்டணமும் வசூலித்து வந்தது தெரியவந்துள்ளது. “மீரட்டில் இது தொடர்பான வீடியோ வைரலாகி உள்ளது. இது தொடர்பாக நாங்கள் வழக்கு பதிவு செய்துள்ளோம். தனியார் மருத்துவமனை உரிமத்தை தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளோம். இன்று, நாங்கள் அதற்கு சீல் வைத்துள்ளோம்” என்று மாவட்ட ஆட்சியர் அனில் திங்க்ரா கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here