தமிழகத்தில் தடையில்லாத மின்சாரத்தினால் ஏற்பட்ட நிலை., அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!!

0
தமிழகத்தில் தடையில்லாத மின்சாரத்தினால் ஏற்பட்ட நிலை., அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!!
தமிழகத்தில் தடையில்லாத மின்சாரத்தினால் ஏற்பட்ட நிலை., அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்!!!

தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத் தேர்வு நடைபெற்று வருவதால் மாணவர்கள் தேர்வு எழுத தயாராகும் வகையில் தடையில்லாத மின்சாரம் வழங்கப்படும் என மின்வாரிய துறை தெரிவித்தது. இந்நிலையில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் அனைத்து பகுதிகளிலும் மின் தேவையின் அவசியமும் அதிகரித்து வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மேலும் பெரும்பாலான வீடுகளில் A/C, பிரிட்ஜ் சாதனங்கள் பெருகி வருவதாலும், விவசாயிகளுக்கு கூடுதலாக 1.5 லட்சம் மின் இணைப்புகளை வழங்கியதாலும் இதுவரை இல்லாத அளவிற்கான மின் தேவை நிலவுகிறது என அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். அதன்படி தற்போதைய மின் தேவை 16,500 மெகாவாட்டில் இருந்து 17,500 மெகாவாட் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 10ம் தேதி முதல் 17647, 17705 என மெகாவாட் மின் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வந்த நிலையில் நேற்று (மார்ச் 15) 17,749 மெகாவாட்டாக அதிகரித்துள்ளதாக டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

TNPSC Group 4.., காலிப்பணியிடங்களை உயர்த்த வேண்டும்.., தேர்வாணையத்துக்கு பரந்த கோரிக்கை!!!

மேலும் மாநிலம் முழுவதும் தடையில்லாத மின்சாரம் வழங்குவதால் இந்த மின் நுகர்வு அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டு இருந்தார். இதனால் ஏப்ரல் மாதங்களில் மின் தேவை 17000 மெகாவாட் முதல் 18100 மெகாவாட் வரை அதிகரிக்கும். இருந்தாலும் மின் தேவைக்கு ஏற்ப கொள்முதல் செய்து தடையில்லாத மின்சாரம் வழங்குவோம் என்றும் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here