உன்னுள் உறைகிறேன்(கல்லூரியின் கதை) – பாகம் 1..,

0

இந்த கதையில் நம் கதையின் நாயகன் வெற்றி பற்றி கூற வேண்டும் என்றால் தமிழ்நாட்டிற்கே உரிய தோரணையில் இருக்கும் அழகான ஆண்மகன். அவனுடைய உலகமே அம்மா அப்பா, அண்ணன், நண்பர்கள் கூட்டுக்குள் தான் இருக்கும். கோவக்காரன். அதே நேரத்தில் படிப்பாளி. பொறுப்பானவன் என்று சொல்ல முடியாது கொஞ்சம் ரௌடி தான்.

அடுத்ததாக நம்ம ஹீரோயின் என்ட்ரி எப்பொழுதும் துறுதுறுவென இருக்கும் சுட்டி பெண் என்றே சொல்லலாம். வீட்டில் அனைவரையும் கலாய்த்து கொண்டு எப்பொழுதுமே சமூக ரிதியாக சிந்திக்கும் பெண் அவள். கூட்டு குடும்பம் என்பதாலேயே சித்தப்பா , பெரியப்பா, அத்தை, மாமா என்றே வளர்ந்தாள். படிப்பில் கொஞ்சம் மந்தம் தான். ஆனால் புத்திசாலி. உலக ஞானமும் வேண்டும் என்று இருப்பவள் நம் ராஜி. ஆம் நம் கதையின் நாயகியின் பெயர் ராஜி.

நம் நாயகனும் நாயகியும் அந்த கல்லூரியில் முதன்முதலாக கால் எடுத்து வைக்கும் தருணம். அருகருகே இருந்தும் இவர்கள் தான் இணைய போவது என்றே தெரியாமல் கல்லூரி வாழ்க்கையை ஆரம்பிக்க வித்திடுகின்றன. எதிலும் தீர்க்கமாக முடிவெடுக்கும் நாயகி இந்த கல்லூரி வாழ்க்கையில் செய்ய போகும் தவறை நினைந்து கூட பார்த்திருக்க மாட்டாள்.

கல்லூரி ஆரம்பிக்கும் முதல் நாள் காலையில் திட்டு வாங்கிக்கொண்டே எழுகிறார். நம் நாயகி கொஞ்சம் சோம்பேறி தான்.

ஏன்டி ராஜி முதல் நாள் காலேஜ் கூட லேட்டா தான் போவியா?? வேகமா எந்திரிச்சு கிளம்புனா தான் என்ன?? ( நம்ம நாயகியோட அம்மா பார்வதி)

ராஜியின் அப்பா வெளிநாட்டில் வேலை பார்ப்பவர். அடிக்கடி கால் செய்து பேசிக்கொள்வதோடு சரி.

எப்போ பாரு இந்த அம்மாவுக்கு இதே வேலை தான். ச்சே… இதோ வரேன் மா…

குளித்து முடித்து அவசர அவரசமாக அம்மா வைத்த ;இட்லியை பிடித்தும் பிடிக்காமலும் உண்டு விட்டு பஸ் ஸ்டாப்பிற்கு செல்கிறாள்.

ஐயோ இப்போவே இவளோ லேட் ஆகிடுச்சு.., இன்னைக்கு என்ன ஆக போகுதோ…,

கிட்டத்தட்ட கல்லூரியை நெருங்கி விட்டாள். என்ன தான் தைரியமான பெண்ணாக இருந்தாலும் முதல் நாள் இல்லையா??

அடியே ராஜி உள்ள போலாமா?? வேணாமா?? இப்போவே இப்படி பயப்பட்டா 3 வருஷம் இங்க தாண்டி குப்பை கொட்டணும் உள்ள போடி. மனசாட்சியுடன் போராடி கொண்டிருந்தாள் நம் ராஜி.

எப்படியோ வகுப்பறையின் வாசலில் கால் வைத்து விட்டாள். உள்ளே சென்றவளுக்கு பெரிய ஷாக். வகுப்பறையை சுற்றி பசங்க கூட்டம் தான்.

என்னடி ரேவதி பண்ண போற…, நல்ல வேல ஒருத்தி மட்டுமாவது இருக்காளே. போய் பேசி பாப்போம்.

ஹாய்…, என் பேரு ராஜி .. இந்த கிளாஸ் தான். என்று அறிமுப்படுத்தி கொள்கிறாள். அவளும் தன்னை ரேவதி என்று அறிமுகப்படுத்திக் கொள்கிறார். இரண்டு பேரும் அவ்வளவாக ஒட்டவில்லை.

கல்லூரி வாழ்க்கை தொடரும்..,

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here