உலக நாடுகள் பங்கேற்கும் “G 20 உச்சி மாநாடு” டெல்லியில் நாளை (செப்டம்பர் 9) மற்றும் நாளை மறுநாள் நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள 19 உறுப்பு நாடுகள் மட்டுமல்லாமல் மற்ற நாட்டு முக்கிய தலைவர்களும் வருகை தர உள்ளனர். இதையடுத்து டெல்லி வரவுள்ள அமெரிக்க அதிபர் ஜோ பைடனை, இன்று இரவு பிரதமர் மோடி சந்தித்து பேச உள்ளார். இதில் நிதி, நிர்வாகம், பாதுகாப்பு தொடர்பான ஆலோசனைகள் மேற்கொள்ள உள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்த நிலையில் அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்து வந்த ஆப்பிள், கொண்டக்கடலை, பாதாம், பருப்பு உள்ளிட்ட பொருட்களுக்கு விதிக்கப்பட்ட கூடுதல் வரியை நீக்கம் செய்ததாக மத்திய அமைச்சகம் அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு பொதுமக்கள் உள்ளிட்ட பலர் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
மெட்ராசுக்கு வா ஆத்தான்னு ஆசையா கூப்பிட்டான்.., கதறி அழுத எதிர்நீச்சல் குணசேகரனின் தாய்!!!!