தனிநபர் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடாது.., ஒரே பாலின திருமணம் குறித்து மத்திய மந்திரி விளக்கம்!!

0
தனிநபர் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடாது.., ஒரே பாலின திருமணம் குறித்து மத்திய மந்திரி விளக்கம்!!
தனிநபர் சுதந்திரத்தில் மத்திய அரசு தலையிடாது.., ஒரே பாலின திருமணம் குறித்து மத்திய மந்திரி விளக்கம்!!

இந்தியாவில் ஒரே பாலின திருமண ஜோடிகளுக்கு அங்கீகாரம் அளிப்பது குறித்து மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ சில விஷயங்களை பகிர்ந்துள்ளார்.

கிரண் ரிஜிஜு

வளர்ந்து வரும் காலகட்டத்தில் நாகரிக, சமுதாய வளர்ச்சி போன்றவற்றால் நாளுக்கு நாள் பல்வேறு மாற்றங்கள் ஏற்படுகிறது. என்ன தான் பல மாற்றங்கள் ஏற்பட்டாலும் காதல், கலப்பு திருமணத்திற்கு எதிர்ப்புகள் வந்த வண்ணம் தான் இருக்கின்றனர். ஆனால் இப்போது இதையெல்லாம் தாண்டி ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் திருமணம் செய்து கொள்வது சகஜமான ஒன்றாக மாறிவிட்டது.

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இந்த கலாச்சாரம் தற்போது இந்தியாவிலும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. இப்படி இருக்கையில் கடந்த வாரம் சிறுபான்மையினர் இந்து திருமணச் சட்டத்தின் கீழ் ஒரு பாலின திருமணத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதை விசாரித்த நீதிபதிகள் இது கலாச்சாரத்திற்கு அப்பாற்பட்டது என்றும், இந்திய திருமண சட்டத்தின் படி ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் கூறினர்.

ஏய்.., எப்புட்றா.., இப்படி சிக்குன்னு மினுமினுப்பா இருக்கீங்களே.., 52 வயசு குமரியாய் ஜொலிக்கும் குஷ்பூ!!

பின் இந்த மனுவை விளக்கமாக ஆராய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சட்ட அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கு குறித்து வரும் ஏப்ரல் 18-ந்தேதி விவாதம் தொடங்க உள்ளது. இப்படி இருக்கையில் ஒரே பாலின திருமணம் குறித்து மத்திய சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ விடம் கேள்வி எழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், “யாருடைய தனிப்பட்ட சுதந்திரத்திம், செயல்பாடுகளில் மத்திய அரசு தலையிடாது. ஒரு தனிநபரின் செயல்பாடு மத்திய அரசை எந்த வகையிலும் பாதிக்காது. ஆனால், திருமண முறை என்பது வேறு, அது கொள்கை சார்ந்த விஷயம். இவ்விரண்டும் முற்றிலும் வேறுபட்டவை” என்று கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here