தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி விலை.. மத்திய அரசு நிர்ணயம்.. எவ்வளவு தெரியுமா???

0

பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு தனியார் மருத்துவமனைக்கான கொரோனா தடுப்பூசி விலையை நிர்ணயம் செய்துள்ளது. அதன்படி தனியார் மருத்துவமனைகள் கோவிட்ஷீல்ட் 780 ரூபாய்க்கும், கோவாக்சின் 1410 ரூபாய்க்கும், ஸ்புட்னிக் வி 1145 ரூபாய்க்கும் விற்கவேண்டும் என உத்தரவிட்டுள்ளது.

ENEWZ  WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

பிரதமர் மோடி ஜூன் 7 ஆம் மாலை 5 மணிக்கு நாட்டு மக்களிடம் உரையாற்றினார். அந்த உரையில் அவர் தடுப்பூசி, மாநிலங்களுக்கு இலவசமாக ஜூன் 21 ஆம் தேதி முதல் வழங்கப்படும் என அறிவித்தார். பின்னர் இந்தியாவில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் 75 சதவீதத்தை மத்திய அரசு கொள்முதல் செய்யும். 25 சதவீத தடுப்பூசிகளை தனியார் மருத்துவமனைகள் கொள்முதல் செய்து கொள்ளலாம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.தற்போது மத்திய அரசு தனியார் தடுப்பூசி மையங்கள், தடுப்பூசி விற்கவேண்டிய விலையை நிர்ணயித்துள்ளது

தனியார் மருத்துவனைகளின் தடுப்பூசி விலை:

  • கோவேக்சின் தடுப்பூசிக்கு ரூ.1200 விலையுடன் ஜிஎஸ்டி ரூ.60 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.1410க்கு செலுத்தவேண்டும் .
  • கோவிஷீல்டு தடுப்பூசியானது ரூ.600 விலையுடன் ஜிஎஸ்டி ரூ.30 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.780க்கு செலுத்த செலுத்தவேண்டும்

  • ஸ்புட்னிக் வி தடுப்பூசியை ரூ.948 விலையுடன் ஜிஎஸ்டி-யாக ரூ.47 மற்றும் சேவைக்கட்டணம் ரூ.150 சேர்த்து மொத்தம் ரூ.1145 என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் தனியார் தடுப்பூசி மையங்கள், மத்திய அரசு அறிவித்துள்ள இந்த அதிகபட்ச விலையை தாண்டக்கூடாது என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Facebook   => Like செய்ய கிளிக் பண்ணுங்க!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here