மத்திய  பட்ஜெட் 2024..,  விவசாயிகளுக்கு அடித்த ஜாக்பாட்.., நிர்மலா சீதாராமன் வெளியிட்ட அறிவிப்பு!!

0
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடரில் ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தொடர்ந்து ஆறாவது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார். இந்த பட்ஜெட் தாக்களில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட வண்ணம் உள்ளார். அந்த வகையில் 11.8 கோடி விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது.இதைத்தொடர்ந்து இப்போது விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
மேலும் அறுவடைக்குப் பின் விளை பொருட்களை பாதுகாக்க, மதிப்பு கூட்டு பொருட்களை உருவாக்க சந்தைப்படுத்தும் திட்டம் செயல்படுத்தி கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் பால் உற்பத்தியை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகள் செய்து தரப்படும். இது தவிர கால்நடை வளர்ப்பை ஊக்குவிக்கும் வகையில் புதிய திட்டங்கள் கொண்டுவரப்படும் என நாடாளுமன்றத்தில் விவசாயிகளுக்கான திட்டம் பற்றி ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here